14th Jul 2014
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
(குறள் 810: பழைமை அதிகாரம்)
விழையார் - பகைவர்களாலும்
விழையப் படுப - விரும்பிப்
போற்றப்படுவர்
பழையார்கண் - பழகிய
பழம் நட்பில் உள்ளவரிடம்
பண்பின் - தம்முடைய
பண்பின் காரணமாக
தலைப்பிரியாதார் - எப்போதும்
பிரியாதார் (அவர்கள் குற்றம் செய்தாலும்)
நெடுநாள்
பழகிய நட்புறவில் உள்ளவரை அவர்மேல் உள்ள உரிமையெனும் பண்பினால், அவர் பிழையே செய்தாலும்
விட்டுப் பிரியாத நட்பின் பெருமையை பகைவராயிருப்பினும் போற்றுவர். இதற்கும் மகாபாரதத்
கதையில் கர்ணன், நட்பின் பழைமையால், துரியோதனின் பிழைகளையும் பொறுத்து, நட்போடு இருந்ததை,
அவர்களுடைய பகைவர்களும் போற்றியதைக் கூறலாம்.
Transliteration:
vizhaiyAr vizhaiyap paDuba
pazhaiyArkaN
paNbin thalaippiritA dAr
vizhaiyAr –
even by enemies
vizhaiyap paDuba –
they will be liked (who?)
pazhaiyArkaN –
towards the longterm friend
paNbin –
because of their excellent quality of preserving friendship
thalaippiritAdAr – and
does not give up on a friend (even if found to be wrong)
One
that does not let down a longterm friend because of his excellent virtue of
preserving friendship, despite the friend’s flaws or ill doings, will be liked
even by his enemies, says this last verse of this chapter. To exemplify this,
we can cite the story of friendship of Dhuryodana and Karna. Karna’s long-standing
friendship would not be swayed even if he had recognized the faults of Dhuryodana
and this was even praised by his enemies.
“The friend of virtue that does
not forsake friendship of longterm
Despite friend’s fault, is praised even by
those in enemity firm”
இன்றெனது குறள்:
பகைவரும் போற்றுவர் நட்பின்
பழமைத்
தகைமை உணர்ந்துபிரி யார்
pagaivarum pORRuvar
naTpin pazamaith
thagaimai uNarndupiri yAr.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam