ஜூலை 12, 2014

குறளின் குரல் - 814

12th Jul 2014

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
                        (குறள் 808: பழைமை அதிகாரம்)

கேள் இழுக்கம் - நண்பரின் செயல்பாடுகளில் இழுக்கிருப்பதாகக் பிறர் சொல்லக் கேட்கையில்
கேளாக் - செவிகொடாது அளவுக்கு
கெழுதகைமை வல்லார்க்கு  - பழைய நட்பினைப் போற்றிக் கொண்டாடுவோருக்கு
நாள் இழுக்கம் - அந் நாள் இழுக்கினைத் தரும் (எந்நாள்?)
நட்டார் செயின் - அந்த நண்பர் அவருடைய நம்பிக்கையைக் குலைக்கும் இழுக்கைச் செய்கையில்

இக்குறள் நீண்ட நட்புறவில் உள்ள ஒருவரின் நம்பிக்கைக் குலைவது எப்போது என்பதைச் சுட்டுகிறது. பரிமேலழகர் உரை மிகவும் குழப்பமாக உள்ளது. “நட்டார் இழுக்கம் செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்”, என்கிறார் பரிமேலழகர். சற்றும் அதிகாரத்தின் பயனுக்கும், குறள் சொல்லவரும் கருத்துக்கும் ஒப்பாத ஒன்று. பொருள் கூறும்போது, “நட்டார் இழுக்கம் செயின் நாள்” என்று கூறியதால், பிழை பொறுத்தலின் சிறப்பை விளக்கும் குறள் என்கிறார் பரிமேலழகர். பழைமையான நட்பு என்பதற்காக நண்பர்கள் செய்யும் பிழையைப் பொறுப்பதுகூட பிழையேயாகும். வள்ளுவர் அவ்வாறு சொல்லியிருப்பாரே என்பதும் ஐயத்துகுரியதே. “நட்டார் செயின்” என்பது நண்பர் இழுக்கைத் தருவது செய்தால் என்ற பொருளில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் நாளே நம்பிக்கைக் கொண்டவர்க்கும் இழுக்காம்.

குறள் சொல்லும் கருத்து இதுவாகத்தான் இருக்கமுடியும். நண்பரின் செயல்பாடுகளில் குறையிருப்பதாக, இழுக்கம்சேர்ப்பதாக உள்ளதாக பிறர் சொல்லக்கேட்டும், அவற்றுக்குச் செவிகொடாத அளவுக்கு நண்பரின்மேல் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு, அந்நண்பர் அவர் நம்பிக்கைக் குலைக்கும் வகையில் செயல்படும் நாள் இழுக்கைத் தருவதாகும்.

Transliteration:

kELizhukkam kELAk kezhuthagaimai vallArkku
nALizhukkam naTTAR seyin.

kEL izhukkam – when others say that a friend is at fault in his acts
kELAk – to the limit of not listening to it with any seriousness
kezhuthagaimai vallArkku – for somebody who values the old and intimate friendship
nAL izhukkam – that day will bring only blame and shame (which day – see next word)
naTTAR seyin – if the friend who he placed trust, does deeds to ruin that trust.

This verse points to when a longterm friend’s faith about his or her friend will be shattered. The commentary of Parimelazhagar for this verse is a bit confusing. He says when the friend fails by doing something blameful, then that day is useful for the other in the friendship; this does not go with the intent of the chapter that is supposed to celebrate the longterm friendship.  His logic is that this verse is about the glory of tolerating the faults of a friend in a longterm friendship.

On the contrary, just because of long friendship, even to tolerate the faults of a friend itself is a fault.  It is highly doubtful that was the intent of vaLLuvar. It makes sense to construe “naTTAr seyin” as “the blemishful”, a friend does. What he has meant is:  when blemishful is done by a friend in the long friendship, it is a day where faith for the other is shattered and will bring shame to that person.

So the verse says: Even when others point to the faults of a friend, those who don’t listen to them will have their faith shattered, when the friend does something really blemishful, seen or experienced by the other friend; it will also be shameful for them.

“One may ignore others, when they blame a longterm friend for his wrongful deeds
 But shame is theirs the day, when the friend is found to let down by the same faults”

இன்றெனது குறள்:

நட்டார் குறைகேளா மாறாத நட்புறவோர்
கெட்டார் இழுக்கவர்செய் நாள்

naTTAr kuRaikELA mARAda nAtpuRavOr

keTTAr izhukkavarsei nAL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...