ஜூலை 11, 2014

குறளின் குரல் - 813


11th Jul 2014

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
                        (குறள் 807: பழைமை அதிகாரம்)

அழிவந்த செய்யினும் - தம்மோடு நெடுநாளைய நட்புறவில் இருப்பவர் அழிவைத் தரக்கூடிய செயல்களைச் செய்யினும்
அன்பறார் - தம் நெஞ்சிலிருந்து சற்றும் தம் நண்பர்மீது கொண்ட அன்பினிலிருந்து மாறார்
அன்பின் வழிவந்த - அன்பின் காரணமாகவே நட்பைக் கொண்டு ஒழுகி
கேண்மையவர் - நட்புறவில் இருப்பவர்.

அழிவையே தரும் செயல்களைச் தம்மோடு நட்புறவில் இருப்பவர் செய்தாலும், அன்பின் காரணமாக நெடு நாளைய நட்புறவில் இருப்பவர், தாம் கொண்ட அன்பொழுக்கின் வழிநின்று நண்பர்மீது கொண்ட அன்பிலிருந்து சற்றும் மாறுபடார்.

நட்புறவுகளில், நெடுநாளைய நட்பெனினும், இரு தரப்பிலும் ஒரே அளவுக்கு அன்பு இருக்குமென்று சொல்லமுடியாது. ஒருவர் மிகவும் அன்பின் காரணமாக  நட்புறவில் இருப்பார்; மற்றொருவர் தம்முடைய சொந்த நலன்களுக்காக மட்டுமே அவ்வாறு நீண்ட நட்பில் இருக்கலாம். அத்தகைய நட்புறவுகளில் உண்மையான அன்புகொண்டவர்கள் நிலை மாறாதவர்கள். நாலடியார் பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.  நண்பர் என்று கொண்டவர், அவ்வுறவிலிருந்து விலகி இருப்பதை அறிந்தால், அவரை மேலும் மிகுதியாகப் போற்றி, அவர் நட்புறவில்லில்லை என்று புறத்தே தூற்றாது தமக்குள்ளாகவே அந்நட்பைப் போற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது அப்பாடல்.

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்

தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை

தம்முள் அடக்கிக் கொளல்.

Transliteration:

Azhivanda seyyinum anbaRAr anbin
Vazhivanda kENmai yavar

Azhivanda seyyinum – Even if deeds causing destruction are done by friends of a long time
anbaRAr –   will not lose their love and affection for the friend
anbin Vazhivanda – those who have based on pure affection
kENmaiyavar – a friendship

Even if deeds of destruction are done by a friend of long time, a person in friendship purely based on true affection will not change in his state of friendship.

Though a long time friendship, both sides of the friendship cannot be assumed to be at the same level. One person may be having that friendship out of true care and affection and other could change during the course and become vile to cause destruction out of selfishness.  A nAlaDiyAr poem conveys a similar thought. Even if a friend deviates from the state of friendhship, a person of true affection shall not speak ill about the friendship-gone and keep that friendship, says that poem.

“Though a long time friendship destructively lets down
 A person of sincere love shall not change in affection”

இன்றெனது குறள்:

நீண்டநாள் அன்பால் பிணைந்தோர் அழிசெயினும்
பூண்டவன்பால் நீங்கிலார் அன்பு

nINDanAL anbAl piNaindOr azhiseyinum
pUNDavanpAl nIngilAr anbu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...