10th Jul 2014
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
(குறள் 806: பழைமை அதிகாரம்)
எல்லைக்கண் நின்றார் - தம்
நட்பின் எல்லைகளை நன்கு வரையறுத்துக்கொண்டு அதற்குள்ளாக நிற்பவர்
துறவார் - அந்நட்பினை துண்டிக்கவோ,
துறக்கவோ மாட்டார்
தொலைவிடத்தும் - தமக்கு
நட்பால் நன்மை தொலைந்து,
தொல்லைக்கண் நின்றார் - அத்தகைய
நன்மைகளைத் தொலைக்கும் கேடுகளைச் செய்யும் நெடுநாளைய நண்பரின்
தொடர்பு - தொடர்பினை.
நெடுநாளைய நட்புறவில்
இருப்பவர்கள் தங்கள் நட்பின் எல்லைகளை நன்றாக வகுத்துக்கொண்டு, அவற்றிலே நின்று ஒழுங்குபவர்கள்.
அத்தகைய பழைமை கொண்ட நண்பர் தம் நட்பினால் நன்மை தொலைந்து, நன்மைகளைத் தொலைக்கும் கேட்டினை
செய்யும் நண்பரின் தொடர்பினை இவற்றால் துண்டித்து துறக்கமாட்டார்.
நட்புறவுக்கு நம்பிக்கை
மிகவும் தேவை; நட்பின் வரம்புகளும் நன்றாக புரிந்து கொள்ளப்படவேண்டும். அவ்வாறு வரம்புகளைப்
புரிந்துகொண்ட நட்புகளுள் சில நேரங்களில் கேடுகளைத் தரும் செயல்களை ஒருவருக்கொருவர்
செய்துவிடலாம். அவற்றால் ஒரு நண்பருக்கு நன்மையும், மகிழ்ச்சியும் தொலையலாம். ஆனாலும்
அவற்றால் எல்லாம் நட்பானது இழக்கப்படாது.
Transliteration:
ellaikkaN ninRAr thuRavAr tholaiviDaththum
thollaikkaN ninRAr thoDarbu
ellaikkaN ninRAr – Those who stand within the confines of the
limits of friendship.
thuRavAr – will not forego or sever a friendship
tholaiviDaththum – even if goodness is lost
thollaikkaN ninRAr – the friend that does adverse deeds (mostly
unintentionally, sometimes intentionally )
thoDarbu – their friendship.
Longtime friends
that have defined their limits of friendship well, and have adhered to it, will
not forego or sever their friendship just because of an adverse deed done by
the friend, most likely unintentionally, but sometimes, intentionally too (though
the verse does not say it, it can be construed so).
For a sustained
friendship, faith and clear understanding of limits are important ingredients.
Even in such friendships, sometimes, adverse acts may happen inadvertently and
one friend may lose good and happiness because of that, at least temporarily. But,
if the friendship has deep understanding, it will not be lost, because of such
stray happenings.
“Standing within the confines or limits, a
good friend will not lose
Or sever, an intimate friendship for acts
done by another, adverse”
இன்றெனது குறள்:
நீண்டகால நண்பரால் கேடெனினும் துண்டிக்கார்
பூண்டநட்பின் எல்லைநின்ற வர்
nINDakAla
naNbarAl kEDeninum thuNDikkAr
pUNDanaTpin
ellaininRa var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam