9th Jul 2014
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
(குறள் 805: பழைமை அதிகாரம்)
பேதைமை ஒன்றோ - அறியாமையின்
காரணம் பற்றியோ
பெருங்கிழமை - பெருமளவில்
எடுத்துக்கொண்ட உரிமையின் காரணமாகவோ
என்றுணர்க - என்று
அறிந்துணர்க
நோதக்க - வருந்தும்படியான
செயல்களை
நட்டார் செயின் - நண்பரென்பார்
செய்தால்
பழகிய நட்பென்பதற்கு அடையாளம், தம் நண்பர் தாம் வருந்தும்படியாகச்
செய்தால் அது பெருமளவில் எடுத்துக்கொண்ட உரிமையின் காரணம் பற்றியென்று அறிக, அறியாமையின்
காரணமாக அல்ல என்றுமறிக.
இதையே நாலடியார் பாடலொன்று “இறப்பவே தீய செயினும்
தன் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ?” எல்லோரும் அறிந்த பழமொழியொன்று, “ஒருவர்
பொறை இருவர் நட்பு” சொல்வதும் இக்கருத்தையொட்டியே.
இருவர் நட்புறவில் இருக்கும்போது, யாராவது ஒருவர்
தவறு செய்தால் அதை மற்றொருவர் பொறுக்க வேண்டும. இல்லையெனில் நட்பு நிலைக்காது. இப்பழமொழியைப்
பழமொழி நானூறு பாடல் இவ்வாறு கூறுகிறது. தெளிவாகப் பொருள் கொள்ளும்படி பதம்பிரிக்கபட்டுள்ளது.
தீமை இல்லவர்,
நட்டவர் தீமையையும்,
‘எம் தீமை’
என்றே உணர்ப, தாம்; அம் தண்
பொரு திரை
வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு.
Transliteration:
pEdamai onRO perungkizhamai enRuNarga
nOdakka naTTAr seyin
pEdamai onRO – Is it due to ignorance
perungkizhamai – No, it is due to liberty of long sustaining
friendship
enRuNarga – so you understand!
nOdakka – if acts that are painful to heart
naTTAr seyin – are done by friends.
The hallmark of
long sustaining friendship is to understand implicitly that when the friend is
indulged in an act that causes pain, it is not due to ignorance, but the
liberty taken by the friend.
A nAlaDiyAr poem
says, even if a friend does something that causes ill, equivalent to the pain
of death, a true friend would only tolerate bearing in mind the health of
friendship. “One person’s patience assures friendship between two” is a
translation of an adage, implying for friendship between two persons to last,
at least one person must be restrained during the testing times – not
necessarily the same person. A pazhmozhi nAnURu poem also says the same thing
in a different way. A friend, would own
his friend’s ill-acts as his own, because only if one keeps patience the
friendship would last.
“If a friend is indulgent in deeds causing
pain, it is not due to ignorance
but
due to great liberty taken, based on long friendship of resilence”
இன்றெனது குறள்:
வருந்தக்க நட்புசெய்தல்
புல்லறிவால் அல்ல
பெருமுரிமை யால்மட்
டுமே
varunthakka
naTpuseidal pullaRivAl alla
perumurimai
yAlmaT TumE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam