4th Jul 2014
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
(குறள் 800: நட்பாராய்தல் அதிகாரம்)
மருவுக - கூடுக
மாசற்றார் - குற்றமிலா
பண்புடையாரோடு
கேண்மை - நட்புறவிலே
ஒன்றீத்தும் - ஏதேனும்
ஒன்றை தந்தாவது (கைப்பொருளை விலையாக)
ஒருவுக - நீங்குக,
விலக்குக
ஒப்பிலார் - பண்பிலே
ஒவ்வாதவரோடு கொண்ட
நட்பு - நட்பினை
குற்றமில்லாத நற்பண்பு உடையவர்களிடமே ஒருவர் நட்பு
கொள்ளவேண்டும். நற்பண்புகள் நிறையபெறாமல், ஒவ்வாதார் நட்பினை ஏதேனும் விலை கொடுத்தேனும்
விலக்கி விடவேண்டும். சில நேரங்களில் அத்தகைய நட்பு விதிவசமாக அமைந்துவிடுவது உண்டு.
விலக்குவதற்கு கடினமாயினும், ஏதேனும் ஒன்றைத் தந்தாவது அவற்றிலிருந்து நீங்குதலே நன்றாம்.
இக்குறளின் கருத்தையொட்டிய குறளினை அறத்துப்பாலின்
செய்நன்றி அதிகாரத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு”
இவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் ஏதேனும் கொடுத்தாவது
நல்ல நட்பைக் கொள்ளவேண்டுமென்றார். இக்குறளில் ஏதேனும் கொடுத்தாவது தீயவர் நட்பை விடவேண்டும்
என்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக்
கொடுக்கும் பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது போலும்.
Transliteration:
Maruvuga mAsaRRAr
kENmaione RIththum
Oruvuga oppilAr
naTpu
Maruvuga – Be in
the company of
mAsaRRAr –
blemishless persons’
kENmai -
friendship
oneRIththum – even giving
some price or something in exchange
Oruvuga – let go
or abstain from
oppilAr – people
of lacking in virtue and virulent
naTpu – their friendship
Friendship must be made only with blemishless and virtuous persons.
Lacking in virtue and virulent must be avoided or shunned giving whatever price
it takes to get rid of such friendships. Some times, by the design of ill fate,
such bad friendships are made and they must be rid off by giving whatever it
takes or else, they will set life only
in ruin.
A verse in the canto of virtues, from the chapter “Gratitude” has already spoken about this through this
verse “maRavaRga mAsaRRAr kENmai
thuravArka thunbaththuL thuppAyAr nAtpu” (Don’t forget the friendship of the pure and
blemishless. Never forsake timely helpers)
In the fourth verse of this chapter vaLLuvar stressed that good
friendships must be made by giving whatever price. Here, he stresses the same
saying bad friendships must be rid off by giving whatever price it demands. It
is interesting to observe that setting price for everything was in vogue, even
during vaLLuvar’s times.
“Have
only friendship with persons that are blemishless
By giving whatever, be rid of virulent and characterless”
இன்றெனது குறள்:
குற்றமிலார்
நட்பேகொள் எவ்விலை தந்தேனும்
நற்றமிலார்
நட்பை விலக்கு
(நற்றம் -
நற்குணம்)
kuRRamilAr
naTpEkoL evvilai thandEnum
naRRamilAr
naTpai vilakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam