28th Jun 2014
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
(குறள் 794: நட்பாராய்தல் அதிகாரம்)
குடிப்பிறந்து - நல்ல
குடிப்பிறப்பாளனும்
தன்கண் பழி - தன் மேல் வரும் பழிக்காக
நாணுவானைக் - வெட்கி
அஞ்சுபவனுமான ஒருவரை
கொடுத்தும் - யாது
கொடுத்தானும் (பொருள்)
கொளல்வேண்டும் - கொள்ள
வேண்டும்
நட்பு - நட்பாக.
சிலருடைய நட்புக்காக சிறந்தவை எவற்றை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அத்தகைய பெருமை
உடையவர்கள் யார்? நற்குடியிலே பிறந்து, தம்மேல் எவ்வித பழியும் வாராது வாழ்பவர்களே
அவர்கள். அத்தகையோர் தம்மேல் பழிவந்துவிடுவதற்கு அஞ்சி நல்வழி அல்வழி நாடார். அத்தகையோரது
நட்பை எப்பொருள் கொடுத்தாகிலும் கொள்ளலே நன்று, என்கிறது இக்குறள்.
Transliteration:
kuDipprandu thankaN pazhinANu vAnaik
koDuththum koLalvENDum naTpu
kuDipprandu – Born in good lineage
thankaN pazhi – blame on self
nANuvAnaik – fearing that (blame on self)
koDuththum – giving whatever it takes to get his (friendship)
koLalvENDum – one must secure
naTpu – his friendship.
For
some friendships, we can give any cherished possession we have. Who is worthy
of such friendship, is the question! Born of good lineage, fearing any blame
that may befall even by accident, and treading only an ill-free good path, are
such people, whose friendship is worth getting by giving anything in exchange
or even as a price – says this verse.
“A person of great lineage and fearful of
blame of blemish
is
worthy of our friendship by giving anything we cherish”
இன்றெனது குறள்:
பழிக்கஞ்சும் நற்குடியான் நட்பினை யாது
வழியானும் கொள்ளலே நன்று
pazhikkanjum
naRkuDiyAn naTpinai yAdu
vazhiyAnum
koLLalE nanRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam