27th Jun 2014
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
(குறள் 793: நட்பாராய்தல் அதிகாரம்)
குணமும் - ஒருவருடைய பண்பு நலன்களும்
குடிமையும் - அவர்கள்
பிறந்த குடிப்பிறப்பும்
குற்றமும் - அவர்கள்
செய்திருக்ககூடிய குற்றங்கள் யாவை
குன்றா இனனும் - குறைவில்லாத
உறவினர்கள் (நட்பும் கூட, ஏனெனில் அவர்களும் உறவே)
அறிந்து யாக்க - என்று
எல்லாவற்றையுமே நன்கறிந்து செய்க
நட்பு - நட்பினை.
எவை இழிவைத்தரும்
நட்பு என்று கூறிய பின்பு, எவற்றைக் கொண்டு ஒரு நல்ல நட்பை செய்துகொள்ளவேண்டும் என்று
கூறும் குறள் இது. ஒருவருடைய பண்பு நலன்கள்,
அவர்கள் பிறந்த குடியின் சிறப்பு, அவர்கள் குற்றங்கள் ஏதேனும் செய்திருந்தாலும் (குற்றங்களே
இல்லாத மனிதர்கள் இல்லையென்பதால்), அவை எத்தகையவை, அவர்களுக்கு எத்துணை உறவாய நண்பர்கள்
உள்ளனர் என்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தபின்னரே, அவர் நட்புறவில் இருக்கத் தக்கவரா
என்று தெளிந்து கொள்ளவேண்டும் நட்பை.
இக்கருத்தையே ஒட்டிய நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. “ஒருவனை
மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது பண்பு நலன்கள் என்ன, குற்றங்கள் யாவை என்று
ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு
நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச்
சென்றடைவேனாக”. அப்பாடலானது:
குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
Transliteration:
guNamum kuDimaiyum kuRRamum kunRA
inanum aRindiyAkka naTpu
guNamum – A person of good
traits,
kuDimaiyum –
lineage,
kuRRamum – blemishes or
shortcomings,
kunRA inanum –
other friends and associations
aRind(u) yAkka –
know them and make
naTpu – friendship.
After
presenting which traits yield blameful friendhsips, vaLLuvar suggests which
traits to look for in a person, to make a good friendship. A persons’ good
virtues, great lineage, the blemishes of them (if any, and the nature of such
blemishes as there is none completely blemish free) and their abundant
associates and relatives (indicative of how good they must be), must be assessed
to make good friends
A
nAlaDiyAr poem says, if a person gets to know a persons virtues and lack of
them only after making friendship with someone, he will become a subject of
redicule of the world and would go to the hell for openly critizing his friends
blemishes. In fact this poem reiterates, the old adage of “think before act”.
“Good traits, lineage, shortcomings and
the extensive kin
must be understood of a person before his
friendship won”
இன்றெனது குறள்:
நற்குணமும் நற்குடியும்
ஏதமற்றும் மிக்கதொரு
சுற்றமும் நோக்கிச்செய் நட்பு
naRguNamum
naRkuDiyum EdamaRRum mikkadoru
suRRamum
nOkkichchei naTpu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam