23rd Jun 2014
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(குறள் 789: நட்பு அதிகாரம்)
நட்பிற்கு - நட்பென்னும்
உயர்ந்த உறவுக்கு
வீற்றிருக்கை யாதெனின்-
அரியணையென்னும் உயர்ந்த இருக்கை எது என்றால்
கொட்பின்றி - மாறுதலோ,
நிலைத் திரிபோ இல்லாது
ஒல்லும்வாய் - இயற்ற
வகையிலெல்லாம், எல்லையென்று வரையறைக் கொள்ளாமல்
ஊன்றும் நிலை - அந்நட்போடு
நிலைத்து இருக்கின்ற நிலையேயாம்.
நட்பென்னும் சொல்லுக்கே
ஒரு உயர்ந்த அரியணையாக இருக்கக்கூடியது எப்போதும் தம்முடைய நட்பு நிலையிலின்று மாற்றமின்றி,
இதுதான் நட்பின் எல்லையென்று வரையறைத்துக் கொள்ளாமல், அதிலே நிலைத்து இருக்கின்ற தன்மையேயாம்.
ஒரு பண்பை கிடைத்தற்கு அரிய உயர்ந்த பொருளாகக் கொள்வதும், சொல்வதும் இலக்கியத்தில்
பலமுறைக் காண்கின்ற ஒன்றே. “குணமென்னும்
குன்று”, “பண்பென்னும் அரியணை” என்றெல்லாம் படிக்கிறோமே! நட்பென்னும் பண்பையே
அரியாசனத்தில் ஏற்றிச் சொன்ன முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
ஒருவேளை இத்தகைய நட்புகள் மிகவும் அரியன என்பதால், அத்தகைய நட்பையே அரியணையில்
ஏற்றி அழகு செய்துள்ளார் வள்ளுவர். மற்றபடி, இப்பாடல் ஒரு உயர்ந்த கனவைச் சொல்லும்
பாடல்.
Transliteration:
naTpiRku vIRRirukkai yAdenin koTpinRi
ollumvAi UnRum nilai.
naTpiRku – for the elevated relationship of friendship
vIRRirukkai yAdenin - what its high rightful seat (throne) is
koTpinRi – without changing ever
ollumvAi – or definining the limits to friendship as to how
much help can be extended
UnRum nilai – to stand firm in that friendship
The high seat
befitting a true friendship is the state of not changing ever, not defining the
limits of how much help can be extended to a friend and staying firm in the
friendship. Most literature would extol a virtue as some elevated place, such
as the peak of a hill or a desirable throne etc. But to give a throne to a
virtue itself, for it to be seated in that decorated place, perhaps this is the first verse.
May be because,
such friendships are rare, if not completely absent, vaLLuvar has given a
throne to such friendship; otherwise this is an impossible dream.
Never changing, nor limited in help extended,
and to stay firm
Is truly a friendships’ decorated throne for
such rare charm
இன்றெனது குறள்
(கள்):
திரிபெல்லை யாதுமின்றி நட்புக் குதவல்
அரியணையாம் அந்நட்புக் கு
tiribellai yAduminRi naTpuk kudaval
ariyaNaiyAm annadpuk ku
(திரிபு - மாற்றம்; எல்லை - வரையறை
நட்பிலே மாற்றமும் எல்லையும் அற்றுதவல்
நட்பிற் கரியணை யாம்
naTpilE mARRamum ellaiyum aRRudaval
naTpiR kariyaNai yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam