ஜூன் 22, 2014

குறளின் குரல் - 794

22nd Jun 2014

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
                        (குறள் 788: நட்பு அதிகாரம்)

உடுக்கை - இடையிருக்கும் ஆடை
இழந்தவன் - நெகிழ்ந்து நழுவுகின்றவன்
கைபோல - கையானது அனிச்சைச் செயலாக அதை தடுத்து மானத்தைக் காப்பதுபோல்
ஆங்கே - அங்கே
இடுக்கண் -துன்பம் வந்த போது,
களைவதாம் - உதவுவது தெரியாமல் அதைப் போக்குவதே
நட்பு - உண்மையான நட்பாகும்

நட்பைப் பற்றி பேசப்படும் இடங்களில் வெகுவாக மேற்கோளாகப் புழக்கத்திலிருக்கும் குறள். இடையிலிருந்து ஆடை நழுவும்போது கையானது அனிச்சைச் செயலாகத் தானாகச் சென்று அதை தடுத்து நிறுத்துவதை எல்லோருமே அவரவர் வாழ்க்கையில் ஒரு முறையாவது உணர்கின்றவொன்று. அக்கையினைப்போல், ஒருவருக்கு துன்பம் தருவன வரும்போது, தாமாக முன்சென்று, துன்பத்திலிருப்பவர் அறியாமலேயே உதவுவதுதான் நட்பாகும்

பெருங்கதைப் பாடலொன்று இதே கருத்தை கீழ்காணுமாறு கூறுகிறது:

“உடையழி காலை உதவிய கைபோ
நடலை தீர்த்தல் நண்பன தியல்பென”

Transliteration:

uDukkai izhandavan kaipOla AngE
iDukkaN kaLaivadAm naTpu

uDukkai – the dress in the waist
izhandavan – while slipping for someone
kaipOla – like his hands would go automatically to save his honor
AngE - there
iDukkaN – when grief strikes
kaLaivadAm – that which removes that and saves without even asking is
naTpu – true friendship

Here is another popular and often used verse used in literary circles.  When the dress slips from the waist, the hand would go automaticallty to arrest to save the honor. This is probably the most experienced happening in everyone’s life; Likewise, when a friend is in grief or misery, even without the friend knowing, helping him to be out of the grief is the true friendship. A simple thought expressed powerfully,

“Like the hand saving the honor by stopping the dress slipping from the waist
 that which helps in grief and misery without asking, is the friendship - chaste”

இன்றெனது குறள்:

சென்றுமானம் காக்கும்கை ஆடைநெகிழ்ந் தாலதுபோல்
துன்பத் துதவுதலே நட்பு

senRumAnam kAkkumkai ADainegizhn dAladupOl

thunpath thudavudalE naTpu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...