19th Jun 2014
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
(குறள் 785: நட்பு அதிகாரம்)
புணர்ச்சி - ஒரே
நாடு, மதம், இனம், இவற்றால் நெருங்கி
பழகுதல் - ஒட்டி உறவாடுதல்
வேண்டா - தேவையில்லை
உணர்ச்சிதான் - கருத்தாலும்,
பண்பாலும் ஒத்து பழகுகின்றவிதம் மட்டுமே
நட்பாங் - உண்மையான தோழமையென்னும்
கிழமை தரும்.- உரிமையைத் தரும்
ஒரே இனம், நாடு, மதம்
என்னும் பிற காரணங்களால் நெருங்கிவருதல் தேர்தல் கூட்டணியைப் போன்று, சந்தர்ப்பவாத
நட்பாக அமையும். அது தேவையில்லை. பண்பட்ட உள்ளத்தாலும், கருத்தாலும், கற்றாரைக் கற்றாரே
காமுறுவது போன்ற உள்ளத்தால் ஒத்து இருப்பதே உண்மையான தோழமை என்னும் உரிமையைத் தரும்.
புறநானூற்றுப் பாடலொன்றின்
வரிகள் (216-1:3) அறிவாலும், பண்பாலும் உயர்ந்து ஒத்த கருத்துடையோரது நட்பை இவ்வாறு
காட்டுகிறது. பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில்
இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்;
அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.
“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்;
ஒழிக்கஅவற்கு இடமே!”
கம்பராமாயணத்தில், விபீடணன்
அடைக்கடலப் படலத்தில், அழகாக இரவும் (எல்லியும்) பகலும் ஒன்றையொன்றை தழுவி நின்றதைப்
போன்று இராமனும் விபீடணனும் தழுவி நின்றதைக் கூறும் பாடல்.
தொல் பெருங்
காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர்;
உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து
உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு நாள் உற்ற
எல்லியும்
பகலும் போல, தழுவினர், எழுவின் தோளார்.
Transliteration:
puNarchchi pazhagudal vENDA uNarchchithAn
naTpAng kizhamai tharum
puNarchchi – being part of the same state, religion and race
pazhagudal – to have
relationship
vENDA – is not needed as a friendship
uNarchchithAn – To be in sync with virtues and elevated
thoughts of the person
naTpAng – will only give true friendship
kizhamai tharum –
and the rights pertinent to that.
To feel kinship and
physically close to each other for reasons of belonging to the same state, religion,
language and race is like an electoral alliance between two parties, purely
opportunistic, not to be considered a true friendship, and is not even needed.
True friendship is that which is fostered by two minds of refined thoughts and
ethics. Wisemen desire wisemens’ company and friendship!
A poem from
puRanAnURu, mentions about the celebrated friendship of kOpperunch chOLa
and the scholarly poet pisirAndaiAr. Though the poet did not meet with
the king until after his death each other their minds were so much together to
be defined as a epitome of great friendship in literature. A poem in kamba
rAmAyaNam also talks of such friendship when vibhIshaNA meets ramA and likens
it to the constant friendship between the night and day.
“Being physically close alone is not defined
as friendship and is not even needed
To be
in unison, in thoughts and ethics is truly a great friendship, and is refined”
இன்றெனது குறள்:
நட்பென்ப என்பதுள்ளம் ஒத்து
பழகுதலாம்
ஒட்டிவுற வாடுதலில் லை
naTpenba enbaduLLam
oththu pazhagudalAm
oTTivuRa vADudalil lai.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam