ஜூன் 18, 2014

குறளின் குரல் - 790

18th Jun 2014

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
                        (குறள் 784: நட்பு அதிகாரம்)

நகுதற் பொருட்(டு) - சிரித்து மகிழ்வதற்காக மட்டும்
அன்று நட்டல் - அல்ல ஒருவரோடு நட்பு கொள்வது
மிகுதிக்கண் - அந்த நட்பானது தப்பு செய்யும் போது
மேற்சென்று - தானாகச் முன் சென்று (கேட்டாலும், கேட்காவிட்டாலும்)
இடித்தற் பொருட்டு - சுட்டிக் காட்டி, தட்டிக்கேட்டு திருத்தவும்தான்

ஒருவரோடு நட்புகொள்ளுதல் அவரோடு சிரித்துப் பேசி மகிழ்வதற்காக மட்டுமல்ல. அந்த நண்பர் தவறும் செய்யும்போது, தானாக முன்சென்று, அவர் கேட்டாலும், கேட்காவிட்டாலும், அத்தப்பினைச் சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டு திருத்தவும்தான், என்று நட்பின் இலக்கணத்தைக் கூறுகிறார் வள்ளுவர்.

கலித்தொகைப் பாடல், “மேல்நின்று மெய்கூறும் கேளிர்” என்கிறது. அறநெறிப் பாடல்லொன்று, “காய உரைத்து கருமம் சிதையாதார் தூயரோ டொவ்வாரோ தக்கார்க்கு”, என்று அழகாகச் சொல்கிறது.

Transliteration:

nagudhaR poruTTanRu naTTal migudikkaN
mERsenRu iDiththaR poruTTu

nagudhaR poruTT(u) – It is not just to have pleasantries and have good laughter
anRu naTTal – a person has friendship with another.
migudikkaN – when that friend makes serious mistakes
mERsenRu – go forward even without being solicited
iDiththaR poruTTu – point out and if need be by asking tough questions, mend them

To have friendship with others is not to have good laughter and fun only. When the friend makes serious mistakes, even wthout being solicited, one must go forward to point out mistakes, even by chiding and mending the friend. Saying thus, vaLLuvar defines what a true friendship is.

To make a friend think and correct even by reproaching is the true friendship.

 A friendship is not just to have pleasantries and good laughter
 Timely chide for serious mistakes, is also in friendship’s charter”

இன்றெனது குறள்(கள்):

சிரித்து மகிழமட்டும் அல்லநட்பு தப்பை
உரிமையுடன் சுட்டவும் தான்

siriththu magizhamaTTum allanaTpu thappai
urimaiyuDan chuTTavum thAn

நட்பு சிரித்து மகிழமட்டும் அல்லதப்பைச்
சுட்டித் திருத்தவும் தான்

naTpu siriththu magizhamaTTum allathappai

chuTTith thiruththavum thAn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...