ஜூன் 20, 2014

குறளின் குரல் - 792


20th Jun 2014

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு."
                            (குறள் 786: அதிகாரம் நட்பு)

முகநக - முகத்தில் மட்டும் புன்சிரிப்பைக் காட்டுகின்ற
நட்பது - நட்பானது (நட்பு போன்ற தோற்றமளிப்பது)
நட்பன்று - நட்பென்று சொல்லமுடியாது.
நெஞ்சத்து - உள்ளமெனும்
அகநக - உடம்புக்குரிய வீட்டில் மகிழ்வு பொங்குமானால் (ஒருவரைக் காணும் போதே)
நட்பது - அத்தகைய நட்பே
நட்பு - நட்பு என்னும் இலக்கணத்துக்கு உட்படுவதாகும்.

2012, ஏப்ரல் மாதம் 2ம், அன்று இக்குறளுடன் தான் என்னுடைய குறளுரைப் பயணம் தொடங்கியது. திரும்பிப் பார்க்கையில் ஏறக்குறைய எண்ணூறு குறள்கள், முடிந்து பயணம் தொடர்கின்றது. ஊடிய காலத்தில் ஊறிய எண்ணங்கள் எத்தனையோ!

இன்றைய குறள் சொல்லும் கருத்து: ஒருவர்க்கு மற்றொருவரைக் கண்டபோதே உள்ளம் மலர்ந்து மகிழ்வும், மனஞ்சிரிப்பதும் உண்டானால், அத்தகையதே உண்மையான நட்பாகும். மற்றவையெல்லாம், உதட்டளவிலும், முகத்திலும் ஒளிந்திருக்கின்ற சந்தர்ப்பவாத, வஞ்சத்தை ஒளித்திருக்கிற சிரிப்பாகும். எளிய கருத்து. என்றைக்கும் வாழ்வில் காண்கின்ற கருத்து.

Transliteration:

muganaga naTpadu naTpandru nenjaththu
aganaga naTpadu naTpu

muga naga - the smile in the face
naTpadu - friendship (that shows a smile in the face)
naTpandru - is not always to be construed to be true friendship
nenjaththu - In the heart
aga naga - gladness felt (in the heart)
naTpadhu - friendship (that feels glad even when you think of the friend)
naTpu - Such friendship is the true and lasting friendship.

The effort to write this research commentary began on April 2nd, 2012 with this verse (initially in some random order); After nearly 800 verses later, the jouney continues, with many memorable experiences and learning on the way.

Todays verse says: When our heart feels glad seeing a person, such is the true friendship; others where the face shows the smile, but inside of them is full of guile and vile, are not to be taken at the face value; we need to keep them at a good length. A simple expression, but seen in daily life with many.

Not the sheer smile on the face makes a friend sincere
that which makes the heart smile and rejoice is truly dear

இன்றெனது குறள்(கள்):


நினைதொறும் நெஞ்சினில் விஞ்சும் மகிழ்வின்
அனையது நேரிய நட்பு

ninaithoRum nenjinil vinjum magizhvin
anaiyadhu nEriya naTpu           
( written as my first kuRal verse on 2th April, 2012)

உள்நினைந்து புன்னகை பூப்பதே நட்பாகும்
கள்ளநகை கொள்வதல்ல நட்பு

uLninaindu punnagai pUppadE naTpAgum
kaLLanagai koLvadalla naTpu

நெஞ்சம் மலர்ந்துநகை கொள்ளநட்பாம் மற்றெல்லாம்
வஞ்சம் ஒளிந்த நகை

nenjam malarndunagai koLLanaTpAm maRRellAm
vanjam oLinda nagai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...