ஜூன் 07, 2014

குறளின் குரல் - 779

7th Jun 2014

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
                        (குறள் 773: படைச்செருக்கு அதிகாரம்)


பேராண்மை என்ப - மிக்க வீரமென்பது
தறுகண் - பகைக்கஞ்சாமையாம்
ஒன்று உற்றக்கால் - அதே பகைவருக்கு துன்பம் வந்த போது
ஊராண்மை - அவர்தம் துன்பத் துகைவுக்கு, பகையென்றும் பாராமல் உதவுவது
மற்றதன் - பேராண்மையெனப்படும் வீரத்தினும்
எஃகு - மிக்க கூர்மை உடையதாம் (பகைவருக்கருளும் நன்னெஞ்சைப் பற்றி பாரதியும் கூறுவர்)

பகைவரை செறுகளத்தில் வீரத்தோடு எதிர்த்து நிற்பதே பேராண்மை எனப்படும். அதே பகைவர் துன்பப்புகையுள் சிக்கி, வருந்தி துவையுறும் போது, அவருக்கு, பகையென்றும் பாராது உதவுவதே வாள்கொண்ட வீரத்தினும் மிக்கதெனக் கருதப்படும், என்கிறார் இக்குறளில். பாரதியும் பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்று மனதை விளித்துச் சொல்லுகிறார்.

ஒத்த கருத்தையொட்டிய நாலடியார் பாடல் இதோ.

தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு.

கம்பராமாயணத்தில், கம்பன் பாடல் தேரின் சாரதியாம் மாதலியிடம் இராமன், இராவணம் மயக்குற்று இருக்கும் நிலைகண்டு இரங்கிக் கூறுவதாக அமைந்த பாடல் இது - குறளின் கருத்துக்கியைந்து.

'படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் 
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து' என்றான்

Transliteration:

pErANmai enba thaRukaNon RuRRakkAl
UrANmai maRRadan eghu

pErANmai enba – being valorous is
thaRukaN – being fearless to enemies (in the battle field)
onRu uRRakkAl – when the enemies suffer in misery
UrANmai – helping them to come out of it, despite enmity
maRRadan – better than being valorus and is
eghu – truly sharp in character.

Typically being valorous means, being able to stand up to enemiy in the war fields, fearlessly. What is even more so is the ability to help the same enemy if they suffer in misery and truly needs help, says vaLLuvar in this verse. Apart from being a virtuous act, here vaLLuvar implies that any humanbeing must show true curtesy to any hother fellow humanbeings, despite enmity.

Both nAlaDiyAr and kamba rAmAyaNam have verse alluding to the thought expressed in this verse.

“Being fearless to enemies in the battlefield is being valorous
 Extending help during their times of misery is more valorous”

இன்றெனது குறள்:

பகைபடைக்கு அஞ்சாமை வீரமவர் துன்பத்
துகைக்குதவல் மிக்கதனி னும்

pagaipaDaikku anjAmai vIramavar tunbath

thugaikkudaval mikkadani num

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...