ஜூன் 06, 2014

குறளின் குரல் - 778

6th Jun 2014

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ந்தல் இனிது.
                        (குறள் 772: படைச்செருக்கு அதிகாரம்)

கான முயல் - காட்டினில் ஓடித்திரியும் முயலை
எய்த அம்பினில் - கொன்று வீழ்த்திய அம்பினைக் காட்டிலும்
யானை - வலிமையில் சிறந்த யானையை
பிழைத்தவேல் - வீழ்த்துவதற்காக் எரியப்பட்டு வீழ்த்தாது தவறிய வேலினை
ந்தல் - கையில் ஏந்துவதே
இனிது - சிறப்பும் நன்றுமாம்

காட்டினிலே துள்ளித் திரிகின்ற முயலை வீழ்த்திக் கொன்ற அம்பினைவிட வலிமையில் மிக்க யானையை கொல்லக் குறிபார்த்து எய்தவேல் தவறி, அயர்ந்தாலும், கையில் ஏந்துவது சிறப்பை, பெருமையைத் தருவதாகும். மோதித் தோற்றாலும் சிறப்பான படையுடனும், வீரர்களுடனும் பொருதுதலே வீரக்கு அழகென்பதை அழகான உவமையினால் விளக்கும் குறள். இதே கருத்தை நாலடியார்ப் பாடலொன்று,

“இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்பெய்த கோல்?”

Transliteration:

kAna muyaleida ambinil yAnai
pizhaiththavEl Endhal inidhu

kAna muyal – the rabbit which is runs in the forest
eida ambinil – better than the arrow that killed that rabbit
yAnai – the elephant
pizhaiththavEl – the spear which was thrown, but missed the target (elephant)
Endhal – to carry such a courageous spear
Inidhu – is good

More than being proud in wielding an arrow that killed a rabbit running in the forest, is holding a spear that was aimed at an elephant but missed it as a target, and failed to shoot down that strong and mighty one for anyone. The implied meaning is fighting with a mighty army or a warrior is anyday a prideful deed, though may not win, than to be boastful about trampling over the weak and unworthy opponent.

A similar comparison has been said in nAlaDiyAr between a jackal and a lion in the context of how wisemen will think whether something is agreeable or not. Is the spear that missed and failed to kill a lion worse than an arrow that pierced and killed a wicked jackal? (“narimA uLang kizhiththa ambinin thIdhO? arimAp pizhaippeidha kOl?)

“A spear missing the aim in shooting a mighty elephant is still considered the best;
 better than a boastful arrow, shooting and killing a weak, rabbit running in the forest!

இன்றெனது குறள்(கள்):

முயல்வீழ்த்தும் அம்பினிலும் யானையை வீழ்த்தா
தயர்ந்தவேல் கைக்க ழகு

muyalvIzhththum ambinilum yAnaiyai vIzhththA
dayarndavEl kakka zhagu

எளியபகை வீழ்த்தியப் பொய்ப்புகழின் போரில்
ஒளிர்வீரம் தோற்றும் புகழ்

eliyapagai vIzhtiyap poipugazhin pOril

oLivIram thORRum pugazh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...