ஜூன் 05, 2014

குறளின் குரல் - 777

78: (Military’s Pride - படைச் செருக்கு)

[A military’s pride is not only in its number, its various divisions, its strategic planning and tactical executions, but the valor that is exhibited at every level from leadership to the last foot soldier.  A motivating chapter from vaLLuvar, discussing prideful moments of various players of a military.]

5th Jun 2014

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
                        (குறள் 771: படைச்செருக்கு அதிகாரம்)

என் ஐ முன் - எம்முடைய தலைவன் முன்பு
நில்லன்மின் - நிற்கத் துணியாதீர்
தெவ்விர் பலர் - பகைவர் பலரும்
என் ஐ முன்நின்று  - எம்முடைய தலைவனை எதிர்த்து அவன் முன்பு நின்று
கல் நின்றவர் - அவனால் பட்டு வீரக்கல்லாய் (நடுகல்லாய்) சமைந்துவிட்டனர்

இக்குறள், பகைவருடைய படையை அணுகி தம்மனோர் ஆண்மையை உயர்த்திச் சொல்லுவதாகிய புறப்பொருள் திணைகளுள் ஒன்றாம் வஞ்சித்திணையின் ஒருதுறையாம், “நெடுமொழி வஞ்சித் துறையைச்” சார்ந்த பாடலாகும். புறப்பொருள் வெண்பாமாலை, இதை, “ஒன்னாதார் படைகெழுமித் தன்னாண்மை எடுத்துரைத்தன்று” நெடுமொழி என்பது வீரவுரை, அல்லது பெருமித உரையாம்.

கீழ்வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்றும் இதையொட்டி அமைந்திருப்பதாம்.

இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
 முன்னர் வருக. முரண்அகலும் - மன்னர்
 பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
 விருந்தாய் அடைகுறுவார் விண்
-       புறப்பொருள் வெண்பாமாலை 44
-        
ஒரு படையின் பெருமிதத்தைச் சொல்லும் அதிகாரத்தை, அதை ஓர் வீரனின் பெருமித உரையாக சொல்லியிருப்பது, மற்ற குறள்களில் இல்லாத நாடக உத்தியாகும். ஆனாலும், இந்த இலக்கணக் கூறினைக் கூறி இவ்வதிகாரத்தைத் தொடங்கிய பொருத்தமே.

இக்குறள் கூறும் கருத்து இதுவே. “எம்முடைய அரசன் முன் நில்லாதீர் பகைவர்களே! உமக்கு முன்னால் பல பகைவர்களும் எம்முடைய அரசனின் எதிர் நின்று போரிட்டு, களத்தில் பட்டு, பிறகு தம்வீட்டில் நடுகல்லாய் போனோர்” என்று ஒரு வீரன் சொல்லுவதாய் அமைக்கப்பட்ட பாடல்.  நடுகல் என்பதைப் பற்றி, சேரமான் பெருமாள் நாயனார், “பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும்” என்கிறார்.  அகநானூற்றுப் பாடலும் இதே செய்தியை இவ்வாறு கூறுகிறது, “ நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர் தோறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”

Transliteration:

Ennaimun nillanmin thevvIr palarennai
munninRu kalnin Ravar

Enn ai mun – before our ruler (his might)
nillanmin – don’t dare to stand up
thevvIr palar – many enemies
enn ai munninRu – standing such before my ruler (being vein-audacious, impudent)
kal ninRavar – they were had their valorous death and became the memorial stone

In this very first verse of the chapter, vaLLuvar uses a format that he has not used before through the prideful words of a solider about his leader’s valor. This particular form of poetry belongs to  “neDumozhi vanjith thuRai” in Tamil literature. This dramatic format as someone’s address to a different person has not been used before by vaLLuvar.

Don’t dare to stand before my mighty leader. After all, many mighty warriors have done it before and had been vanquished to stand as memorial stone at the end, says a soldiers to an opponent army that stands before him.

naDu kal” is a memorial stone that is talked about through Tamil literature

“Don’t ever think of standing before my mighty invincible warrior leader, foes!
 Afterall many a memorial stones, standing testimonial of their deadly woes”

இன்றெனது குறள்:

எம்மரசால் பட்டுநடு கல்லாய் சமைந்தபகை
யும்பலராம் ஆயினீர்நில் லீர்

(எம் அரசால் பட்டு நடு கல்லாய் சமைந்த பகையும் பலராம் ஆயின் (அதனால்) நீர் நில்லீர்)


emmarasAl paTTunaDu kallAi samaindapagai
yumpalarAm AyinIrnil lIr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...