4th Jun 2014
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
(குறள் 770: படைமாட்சி அதிகாரம்)
நிலைமக்கள் - அரசோடு
நின்று போரிட்ட பீடுடையோர் (வலிமையுடையோர்)
சால உடைத்தெனினும் - நன்கு
(பலர்) தன்னிடத்தே கொண்டிருந்தாலும்
தானை - ஒரு படைக்கு
தலைமக்கள் - தகுந்த
தலைமை தாங்குவோர்
இல்- இல்லாதிருக்கும்போது
வழி இல் - அதற்கு
வெல்லும் வழியே இல்லை.
அரசோடு நீடு நின்று போரிட பீடுடைய பெரும் வீரர்கள் பலர் நன்கு நிறைந்திருந்தும்,
நல்ல தலைமை, நாயகம் செய்பவர்கள் இல்லையெனில், எப்படைக்கும் பெருமையும், வெல்லும் வழியுமில்லை.
கடந்த குறளில் ஓர் அரசு தம்படையை வலி குன்றாமலிருக்கச் எவையெல்லாம்
செய்யவேண்டுமென்று சொல்லியபிறகு, இக்குறளிலும் வீரமுடைய வீரரிருந்தாலும், ஏற்றதொரு
தலைமையில்லையெனில் எப்படைக்கும் வெல்லும் வழியே இல்லை என்று சொல்லி இவ்வதிகாரத்தை நிறைவு
செய்கிறார்.
Transliteration:
nilaimakkaL
chAla uDaiththeninum thAnai
thalaimakkaL
ilvazhi il
nilaimakkaL –
Glorious and strong warriors that fought along side with the rule
chAla
uDaiththeninum – even they are plenty in numbers
thAnai – for an
army
thalaimakkaL –
leaders that lead the army
il – when
devoid of them
vazhi il – there
is no way that army can win
Though an army has many strong warriors of glorious stature that
have stood along side of a rule for long, if it has a deficit or devoid of
suitable leaders to lead the army, there if no way the army can win in any war.
After advocating what a rule must do to keep its army strong and
not dimunitive in strength, in this verse vaLLuvar stresses the need of strong
leadership and ends the chapter.
“Though
men of sustained valor in plenty, lack leadership
cannot earn any win and only lead it to be a sinking
ship”
இன்றெனது குறள்:
நல்லதொரு நாயகம்
இல்லையெனில் தானைக்கு
இல்லைபீடு
பீடர்பெற் றும்
(பீடு - பெருமை,
வலிமை; பீடர் - பெருமையுற்றோர், வலிமையுற்றோர்)
nalldoru
nAyakam illaiyenil thAnaikku
illaipIDu
pIDarpeR Rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam