ஜூன் 03, 2014

குறளின் குரல் - 775

3rd Jun 2014

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
                        (குறள் 769: படைமாட்சி அதிகாரம்)

சிறுமையும் - தம் வலிமையாகிய எண்ணிக்கை, போரிடும் ஆற்றல் இவற்றில் குன்றியும்
செல்லாத் துனியும் - அழியாதிருக்கும் வெறுப்பும் (ஆட்சியிலுள்ளோர் மீது) (துன்பம்)
வறுமையும் - மிடிமையாகிய ஏழ்மையும்
இல்லாயின் - இல்லாதிருந்தாலே
வெல்லும் - பகையை வெல்லக்கூடிய
படை. - படையாக இருக்கும்.

ஒரு படையானது தனது வலிமையாகிய எண்ணிக்கை, நிறைந்த படைவகுப்புகள், போரிடும் வியூக அமைப்பு இவற்றில் குன்றியும், ஆள்வோரின் போக்கினால் தம்மை ஆள்பவர் மீதே வெறுப்பும் (இது பரிமேலழகர் செய்த உரையை ஒட்டிச் சொல்லப்படுவது), தாமே ஏழ்மையில் இருத்தலும் ஆகிய இக்குறைகள் நீங்கியிருந்தால் மட்டுமே மாற்றலரை வெல்லக்கூடிய படையாக இருக்கும்.  

இக்குறள், ஒரு நல்ல, வெல்லக்கூடிய படைக்கு நாட்டுப்பற்றும், ஆள்வோர்மீது நம்பிக்கையும் தேவையென்பதையும், படையின் வாழ்வாதாரம் நிறைவுடன் இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகிறது. துனி என்னும் சொல், வெறுப்பு, வறுமை , துன்பம் என்ற பொருள்களைக் கொண்டிருந்தாலும், வறுமையென்றே வள்ளுவர் சொல்லிவிட்டதால், வெறுப்பு என்றோ, துன்பம் என்றோ பொருள் கொள்ளலாம். ஆனால் எதன் மீது, யார் மீது, ஏது காரணம் பற்றி என்ற கேள்விகளுக்கு, அரசின் மீது, அரசின் காரணமாக என்று பரிமேலழகர் பொருள் செய்கிறார்.

அழியா வெறுப்பு என்பது அரசுக்காக ஆநிரை, பெண்களைக்கவருதல் போன்ற இழிவான செயல்களைச் செய்தலால ஏற்படுவது. இக்குறளானது அரசு தம்படை வெல்லுதற்காக செய்யும் திறம்பற்றி அறிவுறுத்துவது.

Transliteration:

siRumaiyum chellAt tuniyum vaRumaiyum
illAyin vellum paDai

siRumaiyum – diminishing in the strength of adequate numbers, and the warring ability
chellAt tuniyum – disgust, revulsion that does not pass away
vaRumaiyum – and the poverty
illAyin – if they (above three) are devoid of
vellum – will win
paDai – the army.

An army that does not diminish in its strength of numbers, planning, placement and warring ability against enemies army, that which does not operate with disgust or contempt to the rule or ruler (this is based on Parimelazhagar’s commentary), that which does not suffer in poverty, is the one that can win in a war.

A winning army must have allegiance to the nation and to the rule; it shall not lose faith in the rule or ruler on any account. The word “tuni” means disgust, revulsion, misery and poverty. Since poverty is mentioned in the same verse, explicitly, it is appropriate to understand the word as either misery or disgust. Parimelazhagar interprets this as disgust towards the rule and ruler; the reasons could be either indulging the army in coveting women of enemies, or the cows (which were considered disgusting acts). The verse indirectly advises the rule and the ruler to enable the army to be a winning army.

“A victorious army is that which is free of diminution,
 disgust, and abject poverty to win and save its nation”

இன்றெனது குறள்:

குன்றுவலி, நீங்கா வெறுப்புடன் ஏழ்மையும்
இன்றிநீங்க வெல்லும் படை

kunRuvali nIngA veRuppuDan Ezhmaiyum

inRinInga vellum paDai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...