8th Jun 2014
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(குறள் 774: படைச்செருக்கு அதிகாரம்)
கைவேல் - தன் கையிலுள்ள வேலினை
களிற்றொடு - தன்னை
எதிர்நோக்கி வரும் யானையினைக்
போக்கி - கொல்ல எறிந்துபின்னர்
வருபவன் - தம்மீது வரும் மற்றொரு
யானையின் ( மீது எறிய )
மெய்வேல் - தன்னுடைய
உடம்பில் பாய்ந்த எதிரியின் வேலை
பறியா - பறித்து
எறிவதற்கு
நகும் - மகிழ்வான்
(பெருமை மிக்க வீரன்)
தம்மீது பாய்ந்து வரும் யானையின்மேல் தம் கையிலுள்ள வேலை எறிந்துபின்னர்,
வரும் மற்றொரு யானையின்மீது எறிய மற்றொரு வேலை தேடி, தன் உடலில் பாய்ந்த எதிரியின்
வேலைப் பறித்து எறிவதை மகிழ்வுடன் செய்வான், பெருமைமிக்க வீரன் என்று சொல்லி வீரர்க்கு
பெருமை தரத்தக்கச் செயலைச் சொல்லுகிறது இக்குறள்.
Transliteration:
kaivEl
kaLiRRoDu pOkki varubavan
meivEl
paRiyA nagum
kaivEl – the
spear that he wields in his hand
kaLiRRoDu – the
elephant that comes charging
pOkki – after
throwing to kill that elephant
varubavan – to
kill another elephant that comes charging
meivEl – the
spear that has pierced his body
paRiyA –
plucking, pulling it away
nagum - gladly
After killing the elephant that came charging with the spear in
his hand, to kill another charging elephant, a valiant soldier, would gladly
pluck and pull the spear of enemy that has pierced his own body, glady. Such is
the glory of a true valiant. This verse is about what brings pride to a valiant
soldier.
“After
killing a charging elephant, to kill another, a warrior of pride
would pull the spear pierced in his body
gladly, to charge in stride”
இன்றெனது குறள்:
களிறெறிய வேலெறிந்தோன்
மற்றொன்றைக் கொல்ல
களிப்புடன்மெய்
தைத்தவேலெய் யும்
kaLiReRiya
vEleRindOn maRRonRaik kola
kaLippuDanmei
thaiththavElei yum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam