மே 24, 2014

குறளின் குரல் - 765

24rd May 2014

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
                        (குறள் 759: பொருள்செயல் வகை  அதிகாரம்)

செய்க பொருளைச் - ஈட்டுக செல்வத்தை
செறுநர் - பகைவர்
செருக்கறுக்கும் - ஆணவத்தை அழிக்க
எஃகதனிற் - வாளாம் அதைவிட
கூரியதில் - கூர்மையானது வேறு இல்லை.

பகைவர் அவரது வலிமையைப்பற்றிய ஆணவம் கொண்டிருப்பர். அவர்களது ஆணவத்தை ஒழிக்க கூர்மையான படைக்கலம் என்னவெனில், செல்வமுடைத்தல்தாம். செல்வமிருப்பின், பெரும்படையும், அரணும், பகைவர் பொருதவரும் போது, பல நாட்களுக்கு எவ்வளமும், குன்றாதிருக்க வாய்ப்புண்டு. அதனாலேயே பகைவர்தம் செறுக்கழிக்கப்பட்டு, அடங்குவர்.

இக்குறளும் பொருள்செயல் வகையைச் சார்ந்ததல்ல. பொருள்செயலுக்கான வலிய காரணமே.  அதிகாரத்தின் தலைப்பை “பொருள்செயல் நோக்கம்” என்று மாற்றிவிட்டால், பல குறள்களும் பொருந்துமென்று தோன்றுகிறது.

கலித்தொகைப் பாடலொன்று, “ பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்...... தருமெனப் பிரிவெண்ணி பொருள்வயிற் சென்றநங் காதலர்” என்று இக்குறளின் கருத்தையொட்டி, காதலன் பிரிந்து சென்ற நோக்கத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாம் சீவக சிந்தாமணி, “செய்கபொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகுபிறி தில்லை” என்று குறளின் சொற்களை ஒட்டியே சொல்லுகிறது.

கீழே மேற்கோளாக இடப்படும் பழமொழிப்பாடல், தன்னைத்தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்கச் செயல் என்கிறது;  மேலும் அப்பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப் பொருளினைக்  கொடுத்தால், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாரே உளர் என்று வினவுகிறது! வேலாற் குத்துதலைவிட, காணிப்பொருளால் குத்துவதே வலிமையானது என்று சொல்லி, “பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்ற கூற்றை அடிக்கோடிடுகிறது. இன்றைய அரசியல் மற்றும் வணிக, மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளும் இக்கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காண்கிறோமே!

தெருளா தொழுகும் திறனிலா தாரைப்

பொருளா லறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்

பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்

காணியின் குத்தே வலிது.

அருளில்லார்க்கு ஆண்டவனுலகம் உண்டோ இல்லையோ, பொருளில்லார்க்கு, இவ்வுலகம் இல்லை என்பதுதானே உண்மை.

Transliteration:

Seiga poruLaich cherunarch cherukkaRukkum
ehgadhaniR kUriya dhil

Seiga poruLaich – Make wealth
cherunarch – the enemies, opponents
cherukkaRukkum – to quell their arrogance (about their might and wealth)
ehgadhaniR – no other better sword
kUriyadhil – that is sharper than this.

Enemies remain in their state of arrogance about their strength, might that perhaps because of their wealth. To quell their arrogance there is no sharper sword than the wealth. Hence it is imperative to make wealth. With wealth, a rule can have strong army, fortress and long lasting supplies in the event of enemies surrounding the fortress.

This verse also does not fit the title of this chapter. Like a lot of other verses in this chapter, this talks about the “need” not the “way” or “method” of making wealth. Perhaps the title of the chapter needs to change to “The need to make wealth”.

A Kaliththogai poem talks about a girl surmising to her friend about why her lover has gone leaving her, saying that he has gone to earn wealth to win over enemies. A “Cheevaga ChinthAmaNi”  poem is closer in words it uses to express the same though. “seiga poruL yArum CheRuvAraich cherugiRkum ehgu piRidillai”.

A pazhamozi nAnuRu poem asks, is there a better way to quell the arrogance of or kill the enemies who are not level headed, other than giving money to a few to do it (tantamount to using mercenaries)?. It further goes to say, more than killing with a spear, killing with money is better.

Is n’t it true that the money has more reach to the depths of netherworld? Don’t we see that works, in today’s world of economics, commerce, and polity?

“There is no other sharper sword than the wealth
 that quells the arrogance of enemies in stealth!”

இன்றெனது குறள்:

செல்வம்போல் கூர்வாளில் ஒன்னார் செறுக்கழிக்க
செல்வமீட்ட வேண்டுமத னால்

selvampOl kUrvALil onnAr seRukkazhikka

selvamITTa vENDumadha nAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...