மே 23, 2014

குறளின் குரல் - 764

23rd May 2014

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
                        (குறள் 758: பொருள்செயல் வகை  அதிகாரம்)

குன்றேறி - உயரமான மலையின் மீது ஏறி அங்கிருந்துகொண்டு
யானைப்போர் - அடிவாரத்தில் யானைகள் போரிடுவதை
கண்டற்றால் - காணுவது போலாம் (அதனால் தமக்கு பயமும், வருத்தமுமில்லை)
தன் கைத்து - தம்முடைய செல்வம்
ஒன்று உண்டாகச் - பெருகி செழிக்க
செய்வான் வினை - செய்வார் செயலை, (பொருள் செய்யும் வகையறிந்தோர்)

உரையெழுதிய எல்லோருமே மழுப்பியிருக்கிற குறள். பரிமேலழகர் உரை ஓரளவுக்கு புரிந்துகொள்ளும்படியாக உள்ளது. ஆனாலும் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. யானைகள் பொருதுவதை உயரமான இடத்திலிருந்து காண்பதற்கும், பொருள் செய்யும் வகைக்கும் என்ன தொடர்பு என்பதைச் சரிவர சொல்லாது, உரையாசிரியர்களே பொருள் விளங்கிக்கொள்ள கடினமான குறள் இது.

குன்றின் மேலே ஏறி, அங்கிருந்து யானைகளின் போரைப் பார்ப்பது, அச்சமும், வருத்தமும் தராது, காண்பவர் இனிது இருந்து காணலாம் என்று சொல்லி, அதுபோல தம் கையில் உள்ள செல்வத்தை வைத்து வினைகளை மேற்கொண்டோனும், வல்லோர்களை அவற்றில் ஏவி, தான் தள்ளி இருந்து, வருத்தமும் அச்சமும் இல்லாது, காணலாம் என்று பொருள்பட பரிமேலழகர் உரை கூறியுள்ளது. இது யானைகள போரிடுவதை ஒரு உவமையாகக் கொண்டு எழுதப்பட்ட உரை. மற்ற உரையாசிரியர்களின் உரையோ, “சந்திரன் வானத்தில் வந்ததால் காக்காய்  வடையைக்  கொத்திச் சென்றது” என்ற அளவில் பொருள் விளங்கிக்கொள்ளாமலே மற்ற உரைகளைத் தங்கள் சொற்களிலே வடித்துதான் உரையெழுதியுள்ளனர்.

இக்குறள் சொல்லும் உருவகம், பணம் படைத்தவர்கள், வலிமை மிக்கவர்களை தங்கள் அரசியல், மற்றும் வணிக எதிரிகளோடு மோதவிட்டு, அதில் ஆதாயம் தேடுவர் என்பது போலுள்ளது. காளிங்கர் உரை மட்டும் சற்று சிந்திக்க வைக்கிறது. “எனவே பாவமும், பகையும் தன்னை நணுகாமல் பரிகரித்து இனிது வாழும் பொருளுடையோன் என்பது பொருளாயிற்று என அறிக” என்கிறார் காளிங்கர். இதுவும் அறவழி சாராத முறையாகவே உள்ளது.

முறையை விட முடிவைத்தான் நோக்கவேண்டுமென்றா வள்ளுவர் சொல்லியிருப்பார். இந்த குறள் ஒன்று இடைச் செருகலாக இருக்கவேண்டும், அல்லது படிமப் பிழைகளால் சிதைந்திருக்கவேண்டும்.

இன்னொன்றும் கூட தோன்றுகிறது. இன்றைய பங்கு நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்தியில் அவர்கள் சொல்வது என்ன? “தனியாக பணத்தை பங்குச் சந்தையில் போட்டு இழப்பதைவிட, எங்கள் நிறுவனத்தில் முதலையிட்டு, தொழில்முறை போட்டியாளர்கள் போட்டியிட்டு எப்படி உங்கள் முதலீட்டைப் பெருக்குகிறார்கள் என்று பாருங்கள்”  என்று வரும் வர்த்தக விளம்பரங்களை நாம்தான் பார்க்கிறோமே! பெரும்பாலும் இவையெல்லாம் முதலை வாயில் போனதைப் போன்று என்றாலும், இவை சிறிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கைத் தருவதில்லையா?

Transliteration:

kunRERi yAnaippOr kaNDaRRAl thankaiththonRu
uNDAgach cheivAn vinai

kunRERi -  climbing a tall mountain and from a comfortable height and distance
yAnaippOr – the fighting between big elephants
kaNDaRRAl – it is like seeing that (without fear, or concern)
than kaithth(u) – his wealth
onRu uNDAgach – to grow and prosper
cheivAn vinai – will do their task (those who know how to make wealth)

Most commentatros have exhibited their own confusion, to put it mildly in their commentary about this verse. Parimelazhagar’s commentary seems to make some sense, though not in any acceptable form. How does it make any sense to compare the elephants fight from a height, to the ways of making wealth? It is apparent that commentators have been largely confused to write a convincing commentary for this verse.

Parimelazhagar’s commentary goes along the following lines. When someone climbs a hillock, they can watch the elephants flight without fear or concern for their safety. Similarly, when engaging strong and capable people, with the wealth in hand, to accomplish the undertaken talks, a person can be without fear or concern about getting his objectives accomplished. This similie seems a far fetched fit in Parimelazhgar’s commentary. For others commentators, it seems it could be any metaphor like, “Because the  moon appeared on the sky, the crow took the fried gram cake”, that does not have to be a fit or even meaningful to start with.

Another and perhaps the only commentator, KALingar, hints that more than means, the results are important, though it sounds non-virtuous.  This metaphor implies that wealthy can engage the strong and capable to fight their business and political rivals, and without any pain,fear can make their wealth. His commentary says, without the sins and enemity touching them, a wealthy can make more wealth, by such means.

It is difficult to think that vaLLuvar would have suggested, the results are more important, than means, even if the means are unethical to start with. Either this verse is an inserted one or has suffered the copy error from palm leaves. Perhaps it is an advice for todays equivalent of stock market investors. Why be an individual investor. Let the people that know the job (investment companies) fight it out, and rest well just investing the money and seeing it grow – a typical marketing pitch by investment companies.!

 Let the mighty and capable fight it out and get
 a persons investments worth multiply the best”

இன்றெனது குறள்(கள்):

மேலமர்ந்து குஞ்சரப்போர் காண்பதொக்கும் தம்செல்வம்
ஆலம்போல் செய்வான் செயல்

(ஆலம்போல் - ஆலமரம் போல பரந்து விரிந்து பெருகச் செய்தல்)

mElamarndhu kunjarappOr kANbadhokkum thamselvam
AlampOl seivAn seyal

(குறள் சொல்லும் கருத்து இதுவாக இருப்பின், சொல்லவந்த கருத்துக்கேற்ற குறள் கீழே!

வலியோரைப் போட்டியில் ஆழ்த்தித்தாம் ஒன்றும்
வலியுறாமல் செய்கசெல் வம்

valiyOraip pOTTiyil AzhththithAm onRum

valiyuRamal seygasel vam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...