மே 25, 2014

குறளின் குரல் - 766

25th May 2014

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
                        (குறள் 760: பொருள்செயல் வகை அதிகாரம்)

ஒண்பொருள் - தாம் பெறத் தகுதியான பொருளை
காழ்ப்ப - மிகுந்த அளவிலே, அளவுக்கு மேல் (மற்றவர்கள் வெறுக்குமளவுக்கு)
இயற்றியார்க்கு - ஈட்டியவர்க்கு
எண்பொருள் - எளிதாம் (கிடைப்பதற்கு)
ஏனை இரண்டும் - அறமும், இன்பமுமாகிய இரண்டு
ஒருங்கு - ஒன்றாக.

ஒருவருக்கு ஏற்புடைய பொருளை, அவர் பெறத்தகுதியான பொருளை, பிறர் பொறாது அவரை வெறுக்குமாறு அளவுக்குமேல் மிக்கு ஈட்டிவிட்டால், மற்ற இரண்டுமான அறமும், இன்பமும் ஒருங்கே அடையக்கூடியவையாகின்றன.

காழ்ப்ப என்ற சொல், அளவுக்கு மேல் மிகுதல் என்ற பொருள் கொண்டாலும், பிறர் வெறுக்குபடியாக என்றும் பொருள் பெறும்.  குறள் கருத்துக்குத் தொடர்பில்லாவிட்டாலும், பிறர் வெறுத்தலுக்கு, காழ்ப்புணர்ச்சி என்ற சொல், எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைத் தெளிகிறதல்லவா?

இக்குறளின் கருத்தையொட்டிய குறளும் இவ்வதிகாரத்தின் நான்காம் குறளில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. “அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்” (754). அக்குறளுக்கான விளக்கவுரையில், மேற்கோளிடப்பட்ட நாலடியார் பாடல் “வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்  நடுவணதெய்த  இருதலையும் எய்தும்” என்று சொல்லியதை மீண்டும் நினைவு கூறலாம்.. அதாவது குற்றமில்லாது இவ்வுலகத்தே போற்றப்படும் மூன்றாகிய அறம், பொருள், இன்பமாகிய மூன்றில்  நடுவண் இருக்கும் பொருள் எய்த முன்னும் பின்னுமுள்ள அறமும், இன்பமும் வந்து சேரும்.

Transliteration:

oNporuL kAzppa iyaRRiyArkku eNpoRul
enai iraNdum orungu

oNporuL – the wealth they deserve
kAzppa – in abundant measure (for others to have implacable hatred too)
iyaRRiyArkku – one who earned
eNpoRul – it is easy to have
enai iraNdum – virtuous and happy, pleasurable life
orungu – together.

When a person earns wealth that he or she deserves, in abundance, the other two – virtues and pleasure will be easy to attain, together. This thought has been already conveyed in an earlier verse in this chapter (754). As we have cited already, a poem from nAlaDiyAr also said the same thought. The word “kAzhppa” means beyond measure or abound. It also means for others to implacably hate. It is natural that somebody has wealth or valor or good fotune beyond measure, most others will have such hate. Points to in which context, the word “kAzhpuNarchi” is appropriate to use.

“When the deserved wealth attained is abound,
 Virtue and pleasure, the two are together around”

இன்றெனது குறள்:

எளிதாம் அறனுமின்பும் ஏற்றபொருள் ஈட்டி
ஒளிபெற்று வாழ்வார் தமக்கு

eLidhAm aRanuminbum ERRaporuL ITTi

oLipeRRu vAzhvAr thamakku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...