15th May 2014
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
(குறள் 750: அரண் அதிகாரம்)
எனை மாட்சித்தாகியக் கண்ணும் - எவ்வளவுதான் வியக்கத்தக்க பெருமைகளை கொண்டிருப்பினும்
வினைமாட்சி - கோட்டையைக் காத்துக்கொள்ளும் செயல் வீரம், திறன், அதுகொண்டு வினையாற்றல்
இல்லார்கண் - இல்லாதவர்களிடம்
இல்லது - இல்லாமல்
இருப்பது போலேயாம்
அரண் - அரணானது
எவ்வளவுத்தான் வியக்கத்தக்க பெருமைகளை உடைய மதில் சூழ்ந்த கோட்டையாயிருப்பினும்,
அக்கோட்டையை காத்துக்கொள்ளும் செயல்வீரம் இல்லாதவர்களை உடைத்தாயின் அவ்வரண் இல்லாமலிருப்பது
போலேயாம்.
அரசாட்சி முறை ஏறக்குறைய உலகின் எல்லா இடங்களிலும் ஒழிக்கப்பட்ட கோட்டைகள்
ஆட்சியின் குறியீடாக இல்லாமல் போனபிறகு இவ்வதிகாரம் பெரும்பாலும் பொருந்தா அதிகாரகமவே
ஆகிவிட்டது, நாட்டின் இயற்கை அரண்களும், பாதுக்காக்கும்
படைகளும்தான் ஒரு நாட்டின் அரண்களாகக் கொள்ளப்படவேண்டும்.
அரண் என்பதை பாதுகாப்பு என்னும்
பொருளை ஒட்டியே இவ்வதிகாரத்தின் குறள்களைப் படிக்கவேண்டும்.
Transliteration:
enaimAtchith thAgiyak kaNNum vinaimATchi
illARkaN illadu araN
enai mAtchiththAgiyak kaNNum – However much magnificent , protected and
glorious the fort is
vinaimATchi – the art and the resolve to protect and work
appropriately to do so
illARkaN – people that don’t have that such resolve
Illadu- it is as good as not having
araN – the fortification
However magnificent
and protected a fort is, if it does not have the people with the resolve to
protect by doing appropriate things to keep vigil, then it is as good as not
having such fortification. Imperial rules have almost vanished in all parts of
the world, except on a ceremonial status in a few; so are the needs for forts
and their protection,
This chapter is
almost rendered useless in today’s context of world rules. However, if we
construe the word “araN” as fortiificaiton of national borders, still
the natural resources and a strong border control and the army of the nation have
to be thought of as fortication for any nation. This makes sense because the
word “araN” means protection.
“When the resident warriors are not resolute
and have the ability to protect
a fort
is useless, however imposing, magnificent, mighty they are to boast
இன்றெனது குறள்:
செயல்வீர மில்லார்க்கு இல்லையரண்
அஃது
வியக்கும் சிறப்புடைத் தும்
seyalvIra millArkku
illaiyaraN ahdu
viyakkum siRappuDaith thum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam