மே 16, 2014

குறளின் குரல் - 757

16th May 2014

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
                        (குறள் 751:  பொருள்செயல் வகை அதிகாரம்)

பொருள் அல்லவரைப் - தமக்கென ஒரு தகுதியுமில்லாரையும்
பொருளாகச் செய்யும் - ஒரு பொருட்டென பிறர் மதிக்கச் செய்யும் தகுதியைத் தரும்
பொருள் அல்லது - செல்வம் அல்லாமல்
இல்லை பொருள் - சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

தமக்கென்று ஒரு தகுதியும் இல்லாதவரையும் ஒரு பொருட்டென மதிக்கச் செய்யும் தகுதியைத் தரும் செல்வம் அல்லாமல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் வாக்கு, உறுதியான நாடும், அதை காக்கின்ற அரண் இருந்தாலும், பொருள் ஈட்டமும் தேவை என்பதைச் சொல்லும். தனிமனிதருக்கும், நாடு என்கிற ஒருங்கிணைந்த அமைப்புக்கும் இது பொருந்தும்.

கலித்தொகைப் பாடல் (14:10), “பொருளல்லால் பொருளும் உண்டோ” என்று இக்குறளின் கருத்தை ஒட்டியே வினவுகிறது.

“வென்றி ஆக்கலும் மேதக வாக்கலும்,
அன்றி யும்கல்வி யோடழ காக்கலும்
குன்றி னார்களை குன்றென வாக்கலும்
பொன்றும் சாகத்தி னாய்பொருள் செய்யுமே” - என்கிறது சீவக சிந்தாமணிப் பாடல் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியாக.

Transliteration:

poruLal lavaraip poruLAgach cheyyum
poruLlladhu illai poruL

poruL allavaraip -  even the person not having any merits on own
poruLAgach cheyyum – to be respected as someone worth respecting
poruLlladhu – like wealth
illai poruL – there is none other better.

Even for a persom not having worthy merits on own, there is none better than his wealth to make the person worthy. “Even the world is not for people that have no wealth”, says an old adage. Though a nation and fortification are there to boast, without ways to build wealth to, what use would it be?

A verse in Jeevaka chinthAmaNi, says, making a person victorious, elevated, educated, bringing up the downtrodden from their abysmal state, giving a lasting status are done by wealth.

“There is none like wealth that makes even otherwise
 meritless to appear meritorious and worthy of praise”

இன்றெனது குறள்:

தகுதியிலார் தம்மையும் தக்காரென் றாக்கும்
மிகுபொருளின் மிக்கது இல்

thagudhiyilAr thammaiyum thakkAren RAkkum

mikuporuLin mikkadhu il

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...