14th May 2014
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
(குறள் 749: அரண் அதிகாரம்)
முனைமுகத்து - போரின்
முகப்பிலேயே
மாற்றலர் - பகைவர்கள், ஒன்னார்
சாய - அழிய, மடிய
வினைமுகத்து - தனது
வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும் (உறுதிபெற்று)
வீறு எய்தி - மிடுக்கு,
பீடு பெற்று
மாண்டது - சிறந்த
கீர்த்தியினைக் கொண்டது இருப்பதே
அரண் - கோட்டையச்
சுற்றி இருக்கும் சிறந்த அரணாகும்
எளிய குறள், சிறப்பு மிக்க அரணின் பெருமையைக்
கூறுவது. போர்முகத்திலே, பகைவர்கள் அழிந்து பட, அதன் வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும்
உரிய உறுதிபெற்று, மிடுக்கும், பீடும் நிறைந்த சிறந்த கீர்த்தியினைக் கொண்டதே ஒரு கோட்டையினைச்
சுற்றி இருக்கும் சிறந்த அரணாகும் கோட்டை அரணின் வலிமை பகைவரை உறுதி குலைய வைக்கும்
பெருமையுடையதாக இருக்க வேண்டுமென்பதை அடிக்கோடிடும் குறளிது.
Transliteration:
Munaimugaththu mARRalar sAya vinaimugaththu
vIReidhi mANDa dharaN.
Munaimugaththu – In the war front
mARRalar – the enemies
sAya – to perish
vinaimugaththu – in its design, structure and built
vIRu eidhi – having all the majesty, strength
mANDa(du) – stays as a glorious symbol if undefeatable presence
araN – such must be the fortification.
A simple verse that
defines what a glorious fortification should be. In the war front, for the
enemies to perish, its design, structure and stature should standout and be
imposing; Only a fortification of such greatness shall be called so! The way a
fortress stands tall and impenetrable shall dilute and fracture the resolve of
enemies for them to perish in the war.
“A fortress it is that which stands glorious,
tall and hard to penetrate
and destroy in the warfront; that which makes
enemies to decimate”
இன்றெனது குறள்:
போர்முனையில் ஒன்னார் மடிய உறுதிசெய்
கீர்த்தியைக் கொண்ட தரண்
pOrmunaiyil onnAr maDiya uRuthisei
kIrthiyaik koNDa daraN.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam