13th May 2014
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
(குறள் 748: அரண் அதிகாரம்)
முற்றாற்றி - முற்றுகையிடுவதில்
வல்லமை உள்ள படைத்திண்மை பெற்றவராய்
முற்றியவரையும் - முற்றுகையிட்டு
வெல்ல நினைக்கும் பகைவரையும்
பற்றாற்றிப் - அரணால்
சூழப்பட்ட தமதிடத்தினை விடாது பற்றியிருக்கும் கடமையாற்றி
பற்றியார் - அரணுக்குள்
வசிக்கும் வீரர்கள்
வெல்வது - (அவ்வுறுதியாலேயே)
வெற்றி பெறுமாறு உள்ளதே
அரண் - ஒரு
நல்ல அரணுக்கழகாகும்
அரணைச்
சூழ்ந்து வளைத்து முற்றுகையிடுவதில் வல்லமை படைத்து அதன்வழி வெல்ல நினைக்கும் பகைவரையும்,
அரணால் சூழப்பட்ட தம்மிடத்தினை விடாது பற்றியிருக்கும் கடமையாற்றும் வீரர்கள் வெல்லுதற்கு
ஏற்ப உள்ளதே நல்ல அரணாகும். ஓசை நயத்துக்காகப் புனையப்பட்ட குறள் என்றே தோன்றுகிறது.
முன்பு சொல்லப்படாத கருத்தொன்றும் இக்குறளில் சொல்லப்படவில்லை.
Transliteration:
muRRaRRi mURRi yavaraiyum
paRRARRip
paRRiyAr velvadhu araN
muRRaRRi –
those that are experts in surrounding a fortress to siege
mURRiyavaraiyum – and
by doing so, wish to conquer the fort and the people inside
paRRARRip –
doing their duty of protecting because of the allegiance to the fort,
paRRiyAr – the
soliders that are inside the fortress
velvadhu – for
them to win eventually
araN – is
a good fortress (so constructed)
Even
with the enemies of expertise in surrounding and making the people inside the
fort deplete their supplies, resources to lose their will to fight and
eventually surrender, the inner strength and the resolve of the soliders inside
the fort, with their strong allegiance will fight to win. Their strength and
will are assured by a stronger fortress!
Perhaps
this verse was written for the beauty of words. Other than that there is
nothing new thath has not been said earlier.
“Though, experts the enemies are to
surrnound to win, soldiers, with allegiance
to fort and a strong desire to protect, would eventually
win, with vengeance”
இன்றெனது குறள்:
முற்றுகையில்
வல்லமையால் சூழ்ந்தபகை அற்றுபற்றால்
வெற்றிகொள்வோர்
உற்ற தரண்
muRRugaiyil
vallamaiyAl sUzhndapagai aRRupaRRAl
veRRikoLvOr
uRRa daraN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam