மே 08, 2014

குறளின் குரல் - 749

8th May 2014

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
                        (குறள் 743: அரண் அதிகாரம்)

உயர்வு - நெடிதுயர்ந்த தன்மை (ஏறி கடத்தற்கு அரிய)
அகலம் - தம் நாட்டுப் படைகள நடமாடவும், படைவாகனங்களை செலுத்தவும் வேண்டிய அகலம்
திண்மை - உறுதியானது (கல்லாலும் மற்ற புகமுடியாத வலிமையும் உடைய)
அருமை - எவ்வகையாலும் உடைத்துப் புகுதற்கு கடினமானது
இந் நான்கின் - ஆகிய நான்கு பண்புகளைத் தன்னகத்தே கொண்டு
அமைவரண் - அமைவதே அரண்
என்றுரைக்கும் நூல் - என்று ஆட்சியைப் பற்றிய நூல்கள் சொல்லும்

முடியாட்சியைப் பற்றிய நூல்கள் அரண் அல்லது கோட்டை மதிலைப் வரையறுக்கையில், அவை நெடிதுயர்ந்து, பகைவர்கள் எளிதில் ஏறி கடக்கமுடியாததாகவும், தம்நாட்டுப் படைவீரகள் நடமாடுவதற்கும், தடவாளங்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் அகலமானதாகவும், உறுதியாகக் கட்டப்பட்டதாகவும், பகைவர்கள் எவ்வகைப் படைக்கருவிகள் மற்றும் பொறிகளாலும் உடைத்து எளிதில் புகுந்துவிடாததாகவும் இருக்கவேண்டும் என்கின்றன. இக்குறளில் கூறப்பட்டுள்ள அரண், அரசர்களின் கோட்டைகளுக்கான அரணைப்பற்றியதாகும்.

வள்ளுவரே எளிதான சொற்களில் சொல்லிவிட்ட குறளை, மாற்றி விளங்கக்கூடிய சொற்களில் எழுதுவது கடினமே. மாற்றுக் குறளில், அதிகமாக பழக்கத்தில் இல்லாத சொற்களை பயன்படுத்தியுள்ளதால், அவற்றுக்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.  ஆனாலும், கோலோச்சுதல் என்ற சொல் எல்லோருக்கும் பழக்கமானதே. அங்கு செங்கோலை உயர்த்திப் பிடித்தலை அது உணர்த்தும். ஓச்சு என்பது உயர்வைக் காட்டும் சொல். ஆன்ற அறிவு என்பதையும் நாம் முன்பே படிதிருக்கிறோம், அகன்று, விரிந்த அறிவு என்ற பொருளில்; அருமை என்ற சொல் உணர்த்தும் பொருள், எவ்வித பொறிகளாலும் உடைத்து ஊடுருவமுடியாதது என்பதாகும். வீச்சு என்பது வலிமையையும், நல்ல நிலையில் இருப்பதையும் குறிக்கும் சொல். இப்போது மாற்றுக்குறளின் பொருள் விளங்குமல்லவா?

இன்றைய உலகிலே கோட்டைகள் என்பதே காட்சிப்பொருளாக ஆகிவிட்ட நிலையில் இக்குறள் தன்பயனை இழந்துவிட்டது.

Transliteration:

Uyarvagalam thInmai arumaiin nAngin
amaivAraN enRuraikkum nUl

Uyarv(u) – impressive height making it difficult to climb
agalam – extensive width to move the soldiers and the arsenal easily
thInmai - strong
arumai – impenetrable stature
in nAngin – these four
amaivAraN – attributes are essential for a fortress, castle
enRuraikkum nUl – say the books (on government, rule)

Books on rule, and government (in the days of kings and kingdoms) have defined a castle or fortress to be architected and built satisfying the following four attributes.  It must be of impressive height making it hard to climb for enemies; it must be broad at its height, to move the soldiers and the arsenal freely; it must be built strong with best building materials; it must withstand assaults in all forms and by any artilleries, canons, and other machinery of enemies.

The verse is rendered useless in today’s context where fortress have no real meaning. May be underground bunkers with some of these attributes taken care of and new attributes defined, will make sense.

Writing alternate verse for this verse was indeed daunting, as vaLLuvar himself has used very simple words to make his point very clear. However the words used in the alternate verses, though not in vogue prevalently can help us understand a few words that we know with meaning because of how they have been combined with other words. Particularly the word “Occhu” has been used as part of “kOlOchchu” meaning holding scepter high. Similarly “vIchchu” implies stature and the strength; “AnRa” means extensive and width. If not for anything, we can bring these words back to vogue J

“A fortress must have the following four attributes, so define the books on rule:
 Impressive height, extensive width, strength, impenetrable, and hard to steal”

இன்றெனது குறள்:


ஓச்சொடு ஆன்றல் உறுதி உடைக்கரிய
வீச்சத் தரணென்னும் நூல்

(ஓச்சு - நெடிதுயர்ந்த; ஆன்றல் - அகலம்; உறுதி - திண்மை; உடைக்கரிய - பொறிகளால் உடைத்துப் புகுதற்கு அரியவகையில் கட்டப்பட்ட; வீச்சம் - வலிமை,, நல்ல நிலைமையில் உள்ளது)

OcchoDu AnRal uRudhi uDaikkariya
vIchchath tharaNennum nUl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...