9th May 2014
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
(குறள் 744: அரண் அதிகாரம்)
சிறுகாப்பிற் - காவல்
செய்யவேண்டிய இடங்கள் குறைவாக உள்ளதாகவும்
பேரிடத்ததாகி - அதே
நேரத்தில் காக்கவேண்டிய நிலப்பரப்பு பெரியதாகவும் கொண்டு
உறுபகை - பொருத வரும் பகைவரின்
ஊக்கம் அழிப்ப(து) - ஊக்கத்தைக்
குலைத்து அழிக்கக்கூடியதாகவும்
அரண் - இருப்பதே
அரண் எனலாம்
ஒரு நாட்டைக் காக்கின்ற
அரணானது ஒரு சில இடங்களில் மட்டுமே காவல் காக்கவேண்டிய அளவுக்கு உறுதியாகவும், நாட்டின்
பாதுக்காப்பை உறுதி செய்வதாகவும் இருக்கவேண்டும். கோட்டைக் கொத்தளமாக இருப்பின் சில
இடங்களிலேயே வாயில்களைக் கொண்டு, அவை காக்கும் படைத்திறமும் அங்கு இருக்கும்படியாக
வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும்.
கோட்டை வடிவமைப்பிலே
நான்கு புறமும் வாயில்களை வைத்து எண்திசையிலுமிருந்தும் வரும் பகைவர்களிடமிருந்து குடிகளைக்
காத்த வரலாறுகள் ஏராளம். முற்றுகை இட்டவர்களை மாதக்கணக்கில், அவர்கள் உணவுக்குக்கூட
வழியில்லாமல், வாடிப்போகச் செய்து தோற்றுத் திரும்பிய அரசர்களும் ஏராளம்.
மகேந்திரபல்லவனின் கோட்டையை
முற்றுகையிட்ட இரண்டாம் புலிகேசி மாதக்கணக்கில் காத்திருந்து, அவனுடைய படைகள் ஊக்கமிழந்து
இருந்ததைப் பற்றிய பேராசிரியர் கல்கி அவர்களின் வருணனை நினைவுக்கு வருகிறது. பாரியின்
பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டபோதும் பட்டினிபோட்டும் பணியவைக்க இயலாது சோர்ந்ததை
சங்க இலக்கியச் சித்திரங்கள் காட்டுகின்றன. கபிலரின் பாடல் வரிகள், “கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொள்ற்கு
அரிதே” (புறம் 110), அவர் பாரி மகளிர் வேண்டி, முற்றுகையிட்ட மூவர்க்கும், அவர் கூறியதைச்
சொல்லுகின்றன. இது உணர்த்துவது பாரியின் கோட்டை வலிமை பற்றியும்தான்
இயற்கை அரண்களும் இவ்வாறே
இருக்கவேண்டும். மலையாலும், கடலாலும் சூழப்பட்ட சிலநாடுகள் பகையரசர்களால் புகுதற்கரியதாக
இன்றும் உள்ளதை நினைவுபடுத்தும் குறள்.
Transliteration:
siRukAppiR pEriDaththa thAgi uRupagai
Ukkam azhippa daraN
siRukAppiR - Fortified
strongly only with a few openings to protect
pEriDaththathAgi – yet with a large land to protect
uRupagai – the enemies that surround to wage a war
Ukkam azhippad(hu) – that which destroys the interest and energy
to be lost
araN – such is fortification
Fortification for a
nation should be such that only a few places need to be guarded for the vast
land behind it; If a fort needs be protected, it shall have a few entry and
exit point that are protected heavily. Historical forts that still exist to
speak the glory of great kingdoms give us clues of such designs. Many a stories
abound in the pages of history that speak about the humiliated opponents that
have surrounded such strong forts.
Though may be
fictional, the narration of Prof. Kalki about how Pulikesin II that
surrounded Mahendravarman had to suffer for months, not able to
penetrate the strong fort of the Pallavan king. A picture portrayed in the
Sangam literature of PuranAnUru underlines such a humiliation for the
three monarchs of Tamil country – Chera, Chola and Pandya together at the door
of liberal donor pAri of PirAnmalai. Sangam poet goes to them and tells
them that instead of surrounding the fort and waiting for “pAri” to be
defeated, they could go before him and sing his praise to get his daughter as
the bounty in return. He effectively conveys the impossibility of penetrating “pAri’s”
fort through the lines, “kaDandhu aDu thAnai mUvirum kUDi uDanRanir Ayinum
paRambu koLRku”.
The verse also
implies that even the natural fortification of water bodies, mountains and the
dense forest should be situated similarly.
“Fortification shall only be with a few
openings to protect the vast land behind
And must be able to destroy the interest and
energy of enemies that surround”
இன்றெனது குறள்:
பகைக்கூக்கம் கொல்லுமரண் நீள்பரப்பைக் காவல்
மிகையின்றி காப்பது வாம்
pagaikkUkkam kollumaraN nILparappak kAval
migaiyinRi kAppadhu vAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam