மே 07, 2014

குறளின் குரல் - 748

7th May 2014

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
                        (குறள் 742: அரண் அதிகாரம்)

மணி நீரும் - என்றும் வற்றாத தெள்ளிய நீர் பெருகும் ஆறுகளும்,கடல் போன்ற நீர் வளங்களும்
மண்ணும் - பரந்த நிலப்பரப்பும்
மலையும் - உயர்ந்து நின்று இயற்கையான மதிலாகும் மலைகளும்
அணி நிழற் காடும் - அழகுமிகுந்தது, நிழலைத் தருகின்ற அடர்ந்த காடும்
உடைய(து) அரண் - கொண்டதே அரண்.

இக்குறளில் அகழியால் சூழப்பட்ட கோட்டை மதிலைவிடவும், ஆழமிக்க, நீலமணி போன்ற தெளிந்த நீர் பெருக்கு நிறைந்த ஆறுகள், கடல்கள், பரந்த நிலப்பரப்பு (சேற்று மண் மற்றும் புதைமண் பரப்பு என்றும் கொள்ளுவர்), உயர்ந்த மலைகள், நிழலைத் தருகின்ற அழகிய தண் காடுகள் இவற்றை கொண்ட இயற்கையான அரண்களே, ஒரு நாட்டுக்கு அரணாகும் என்கிறார் வள்ளுவர்.

காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலப்பாடல் இயற்கை அரண்களை இவ்வாறு கூறுகிறது.

நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள் உள்ளிட்டு மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி

இப்பாடலும் மேலே சொல்லப்பட்ட நான்குவகை இயற்கை அரண்களையும், மற்றும் போர்களில் திறம்வாய்ந்த படையையும் அரணாகச் சொல்லுகிறது.

Transliteration:

maNInIrum maNNum malaiyum aNinizhaR
kADum uDaiya daraN

maNI nIrum – perennial water bodies of river and oceans
maNNum – vast land of quicksand, brackish soil
malaiyum – high mountains serve as natural fortress
aNi nizhaR kADum – dense forests surrounding
uDaiya(duh) araN – having all these is the fortifying aspects for a nation.

In this verse vaLLuvar mentions four natural deterrents that serve as fortification for a nation to prevent enemies. They are perennial rivers that run deep, wid, long, and the oceans along the borders; a vast land of quicksand to not let enemies easily enter; high mountains that shield; and dense, beautiful forests that serve as assets as well fortification.

In ethical poetry of SirupanchamUlam, work of the poet kARiyAsan mentions along with these, the fifth deterrent is strong army serves as an element of fortification for a nation.

“Deep, broad running water bodies, vast land of quicksand, high mountains,
 And beautiful, cool dense forests serve as natural fortifications for nations”

இன்றெனது குறள்:


நீரும் களர்நிலமும் நீள்மலையும் சூழ்காடும்
சேரும் சிறப்பே அரண்

nIrum kaLarnilamum nILmalaiyum sUzhkADum
sErum siRappE araN.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...