மே 06, 2014

குறளின் குரல் - 747

75: (Fortress - அரண்)

[Every state, apart from being a desirable state for people to live in, must be protected by the strong not easily infiltrate-able borders. Though the word “araN” generally stands for  “fortress”, in larger context it means all the natural and man-made circle of protection around a nation. Since it serves as a fortification for the nation, its ruler and subjects, vaLLuvar has allocated a complete chapter to write about its need, nature, how it is defined, how useful it is etc.]

6th May 2014

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
                        (குறள் 741: அரண் அதிகாரம்)

ஆற்றுபவர்க்கும் - பிற நாட்டின் மீது படையெடுத்துச் செல்பவருக்கும்
அரண் - தன் நாட்டிற்கு தக்க அரணைக் கட்டமைப்பது
பொருள் - சிறந்த அமைப்பாகும்
அஞ்சித் - அல்லது தம் நாட்டின்மீது  படையெடுத்து வருவோருக்கு அஞ்சி
தற்போற்றுபவர்க்கும் - தம்மையும், தம்மக்களையும் காப்பாற்றிக் கொள்ளும் அரசுக்கும்
பொருள் - அரண் ஒரு சிறந்த அமைப்பாகும்

பகைமேல் போருக்குச் செல்வோர்க்கும் தம் நாட்டை நீங்குவது தேவையாகலின் அவர்களுக்கு, தம் நாட்டையும், மக்களையும், அவர்கள் நாட்டை நீங்கிய காலத்த்தும் காக்க வேண்டுமாகையால், நாட்டுக்கு உறுதியான அரண் தேவை. அதேபோல பகைவர்கள் தம் நாட்டின் மீது போர் தொடுத்து வரும்போது தம் நாட்டின் வளங்களையும், நாட்டு மக்களையும் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்களுக்கும், உறுதியான அரண் தேவை என்று கூறும் குறளிது.

திரிகடுகம், வேந்தர்களுக்கு தேவையான அங்கமாக அரணைக்கூறுகிறது.  “பலர் தொகினும்
 எத்துணையும் அஞ்சா எயில் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு”  புறநானூற்றுப் பாடலொன்று,  “பாடல் சான்ற விறல் வேந்தனும்மே  
வெப்பு உடைய அரண் கடந்து 
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11) என்று பிறநாட்டின்மீது படையெடுத்துச் சென்று பகைவரது அரணை அழித்து வென்ற செய்தியைக் கூறுகிறது. மற்றொரு புறநானூற்றுப் பாடல், “ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி…” (புறம் 92) என்று நெடுமான் அஞ்சியின் வீரத்தைச் சொல்லுங்கால் கூறுகிறது.  “நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36)  என்று பிரிதொரு புறப்பாடல் பாடுகிறது. சங்க இலக்கியங்களில்  அரண் என்பதன் சிறப்பைப்ப் பாடும் பாடல்கள் நிறையவே உள்ளன.
Transliteration:

ARRu bavarkkum araNporuL anjithaR
pORRu bavarkkum poruL

ARRubavarkkum – For those who go on war with enemies
araN – to protect the nation and his citizen, fortification
poruL – is required infrastructure
anjithaR – for those who fear enemies coming to war
pORRubavarkkum – and to save themselves, their nation and citizens also,
poruL – a strong fortification is a required infrastructure.

Those who go on war to quell their enemies or to expand their nation, a strong fortification of their own land is of prime importance to protect their national assets, citizens. Records abound through the pages of history about the rulers that have failed on this account and have lost their own hold while on pursuit with bigger ambitions. Likewise, rulers who fear their enemies coming to war with them, need to have a strong fortification to safeguard the nation and the citizens! vaLLuvar begins the chapter saying thus.

Sangam literature, specifically works of “puRanAnURu” and “Madurai kAnji” have many poems that stress the need for fortification and the valor of kings that have broken the same of their enemies  ThirukaDugam also points out to fortress as an essential limb of a rule.

“Fortification is as essential for those who go on a pursuit of war
 with their foes as it is for those who protect from foes on shore”

இன்றெனது குறள்:

படைதொடுப் பார்க்குமரண் அஃதஞ்சி காக்கும்
தடையாய்கொள் வார்க்கு மரண்

paDaithoDup pArkkumaraN ahdhanji kAkkum

thaDaiyAikoL vArkku maraN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...