மார்ச் 29, 2014

குறளின் குரல் - 709

29th Mar 2014

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
                        (குறள் 703: குறிப்பறிதல் அதிகாரம்)

குறிப்பிற்  - ஒருவரின் முகக்குறிப்பைக் கொண்டே
குறிப்புணர்வாரை - அவர் அகத்தில் குறித்ததை அறிவாரை
உறுப்பினுள்  - தம் செல்வத்துள்
யாது கொடுத்தும்  - ஏது கொடுத்தாகிலும்
கொளல் - தமக்குத் துணையாக்கிக் கொள்ளவேண்டும்

ஒருவர்தம் முகக்குறிப்பால் அவரது அகத்தில் உள்ளதை வெளிச்சமாக அறிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவரை தமக்கு அருகிலேயே துணையாக தன்னுடைய உடமைகளில், எப்பொருள் கொடுத்தாகிலும் கொள்ளவேண்டும் என்கிறது இக்குறள். இது ஆள்வோர்க்கு, அவர்கள் கொள்ளவேண்டிய அமைச்சருக்கு இருக்கவேண்டிய குறிப்பறியும் திறனைச் சொல்லுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழியின் குறள் வடிவமே இக்குறள். இரகசியங்களைக் காப்போர் மிகவும் உள்ளழுத்தமானவர்கள்.  அவர்களது முகக்குறிப்பைக் கொண்டோ, நடவடிக்களைக்கொண்டோதாம் அவர்கள் ஆற்றும் செயல்களை அறியவேண்டும். அவ்வாறு அறிதலைப் பற்றியதே இக்குறள்.

Transliteration:

kuRippiR kuRippuNai vArai uRuppinuL
yAdhu koDuththum koLal

kuRippiR – Looking at someone’s face
kuRippuNaivArai – those who know, what they have in their inside
uRuppinuL – Among all his possessions
yAdhu koDuththum – giving whichever would keep him (such perceptive mind)
koLal – and retain such insightful mind

A ruler must keep an insightfult reader of others minds, perceptive by looking at the others bodily signs, with him, giving whatever priced possession he has – so advices this verse, a ruler to select and retain insightful ministers with him. Though what the face shows is indicative of what is in somebody’s mind, only a shrewd person would be able to read that accurately. People that guard secrets are usually careful to conceal their thoughts. Only careful observation and deep insights into their behavior would reveal what they think in their minds. When such insightful minds, capable of unraveling complex and concealing minds are found, imperative it is for a ruler to as said in this verse.

“Whatever it takes to keep those who read others mind
 by their face, a ruler must do and keep as his rare find”


இன்றெனது குறள்:

அகக்குறிப்பை, காட்டும் முகக்குறிப்பால் கொள்வார்க்
குகந்தேதும் தந்துதுணை கொள்

agakkuRippai, kATTum mugakkuRippAl koLvArk
kugandhedhum thandhuthuNai koL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...