30th Mar 2014
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
(குறள் 704: குறிப்பறிதல்அதிகாரம்)
குறித்தது - மற்றவர்
உள்ளத்தில் குறித்ததை
கூறாமைக் - அவர்கள் கூறாமலும்
கொள்வாரோ(டு) - அறிந்து
கொள்வாரோடு
ஏனை - மற்ற
உறுப்போரனையரால் - அவையங்களால் ஒத்தவர் போலிருப்பினும்
வேறு - அவர்கள்
இயல்பால், அறிவால் வேறே
இதுவும் வெறும் அதிகார
நிரப்பியான குறளே! அவையங்களாலும், உருவத்தாலும் ஒத்தவர்களாயிருப்பினும், மற்றவர் உள்ளத்தில்
உள்ளதை அவர்கள் கூறாமலேயே குறிப்பால் அறிவோர், அறிவினால் வேறுபட்டவர்களே,
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல”
என்ற பழமொழிக்கும், “எப்பொருள் எத்தன்மைத்தாயினும்..” என்ற குறளுக்கும் வேண்டுமானாலும்
பொருந்துமே தவிர, குறிப்பால் உணர்வோரின் சிறப்பையோ, குறிப்பாலறிதல் பற்றிய சிறப்பையோ
குறிப்பால் கூட உணர்த்தாத குறள்.
குறிப்பால் அறிவோர்,
அறிவால் மேம்பட்டவர் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டதே! ஒருவேள, வள்ளுவர் யாருக்காவது இருவரைக்காட்டி,
எப்படி இருவரும் உருவால் ஒத்திருந்தாலும், அவருள் ஒருவார் குறிப்பால் உணரும், அறிவால்
மேம்பட்டவர் என்று சொல்லியிருக்கலாமோ?
Transliteration:
kuRiththadhu kURAmaik koLvaRo DEnai
uRuppO ranaiyarAl vERu
kuRiththadhu – what others think or have in their minds
kURAmaik – even if they don’t reveal
koLvaRoD(u) – one who is able to read and understand
Enai – even if in other
uRuppOranaiyarAl – parts of body or form look similar to
someone else
vERu – are different and definitely better than the other person
Another chapter
filler verse! Though two persons may be looking similar in form or in parts,
one who is able to read others mind and be able to understand, without their
revealing, what is in their minds, is definitely superior in intellect – is what is conveyed in this verse.
This verse seems to
be an interpretation of the adage “All that glitters is no gold” and another verse said for ascetics, “eppoRul
eththanmaith thAyinum”. It does not specially or specifically say anything
significant about the ability to read others mind itself, required of
ministers.
It has been already
said much in previous verse about such people are of evolved intellect. Perhaps
vaLLuvar, could have, during one of his conversations, shown two people and
compared how one was truly intelligent because of this ability.
“Though similar in form and looks, a person
that reads others mind
Without them revealing any, is superior and is
of intellectual kind”
இன்றெனது
குறள்:
அறிவினில் மேலாம் அவையங்கள் ஒத்தும்
குறிப்பால் அறிவார்கூ றாது
aRivinil mElAm avaiyangal oththum
kuRippAl aRivArkU RAdhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam