22nd Mar 2014
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
(குறள் 696: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)
குறிப்பறிந்து - அரசனின்,
ஆள்வோனின் மனவோட்டம் அறிந்து
காலங் கருதி - சொல்லும்
நேரமும் பார்த்து
வெறுப்பில - அவனுக்கு
வெறுப்பை ஊட்டாதவையும்
வேண்டுப - அவன்
விழைபவற்றையும்
வேட்பச் - அவன்
விரும்பிக்க் கேட்குமாறு
சொலல் - சொல்ல
வேண்டும்.
பொதுவாக ஒப்புக்கொள்பவற்றையே
சொன்னாலும், சற்று முறண்பாடானவொரு கருத்தையும் சொல்லுகிறது இக்குறள். இக்குறள் கூறும் கருத்து: அமைச்சனும், அரசனுக்கு
அருகில் இருப்பவர்களும், அரசனின் மனவோட்டம் அறிந்து, அவனிடத்தில் ஒன்றைச் சொல்ல தக்க
நேரமும் அறிந்து, அவனுக்கு வெறுப்பு ஊட்டாததாயும், அவன் எதை வேண்டுகிறானோ அதையும்,
அதே நேரத்தில், அவன் விரும்பும்படியாகவும் சொல்லவேண்டும்.
ஒரு அரசனிடமோ, அதிகாரத்தில்
இருப்பவரிடமோ பேசும் போது குறிப்பறிந்து, பேசுவதற்குரிய நேரமும் பார்த்துத்தான் பேசவேண்டும்
என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவனுக்கு வெறுப்பு ஊட்டுவையும் பேசக்கூடாது. ஆனால் அவன்
விழைபவற்றைத்தான் பேசவேண்டும் என்றால் அமைச்சர்களே தேவையில்லை. இதுவே முறை என்று அமைச்சரும், ஆன்றோரும் கற்றறிந்ததை,
அரசன் உணராத போது, அவனுக்கு வெறுப்பை ஊட்டுவதாகவே இருப்பினும், அவன் விழையாதவையாகவே
இருப்பினும் எடுத்துச் சொல்வது அமைச்சர்தம் கடமை. அரசனுக்கு எவ்விதம் சொன்னால் ஏற்குமோ
அவ்விதம் சொல்வது அறிவுடமைதான். ஆயினும் சில நேரங்களில் உண்மையைக் கூறும்போது, அவ்வாறு
பூச்சுக்களோடு சொல்லவியலாது. “வேண்டுப” என்பதுதான் எல்லா நேரங்களிலும் இயலாத முரண்பாடு
Transliteration:
kuRippaRindhu kAlang karudhi veRuppila
vENDuba vETpach cholal
kuRippaRindhu – knowing Kings mind
kAlang karudhi – knowing the appropriate time to talk to him
veRuppila – that which is not revulsive to him
vENDuba – and that which he desires to hear
vETpach – that too in a way palatable to him
cholal – must speak, a person in the presence of a King
Though what this verse says is mostly acceptable, it also advances a
thought which is not congruent with what is stipulated for ministers that work
closely with a King. A person that speaks to a king must understand his mind,
must wait for the ripe time, must not speak that which is revulsive to him,
must speak what the King desires to hear and that too, in way that is palatable
to him, says this verse.
The word “vENDUba” is the one which is not always appropriate in
this verse. If a person shall speak only what the King desires to hear, then
there is no need for any learned assembly of ministers to be with him.
Sometimes, a bitter pill needs to be given to a ruler that is not thinking
right in a given situation. However much a King may dislike what is said and
how it is said, a ministers duty is to keep the Kings interest first and mut be
courageous to course correct his King.
“Knowing
Kings mind, in appropriate time, that which is not repugnant,
and that
which he desires to hear, palatable to him, speaks intelligent”
இன்றெனது
குறள்(கள்):
உள்ளமும் நேரமும் நோக்கி வெறுப்பதள்ளி
கொள்வதுளம் கொள்ளுமாறுச் சொல்
uLLamum
nEramum nOkki veRuppathaLLi
koLvaduLam
koLLumARuch sol
உள்ளமும் நேரமும் நோக்கி வெறுப்பவை
தள்ளிவேண்டல் கொள்ளுமாறுச் சொல்
uLLamum
nEramum nOkki veRuppavai
thaLLivENDal
koLLunARuch sol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam