21st Mar 2014
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
(குறள் 695: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)
எப்பொருளும் - எப்பொருளைப்
பற்றி (மன்னர் பேசினாலும்)
ஓரார் - அதை ஒளிந்து கேட்காமலும்
தொடரார் - தாமாகச் சொல்லாத பொருளைப்பற்றி
விடாது வினவாமலும்,
மற்று அப்பொருளை - அவராக
(மன்னராக), அப்பொருளைப் பற்றிச்
விட்டக்கால் - சொல்லும்போது,
(உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல்)
கேட்க - அப்போது
மட்டும் கேட்டுக்கொள்க
மறை - ஒளித்துவைத்திருந்த
பொருள் பற்றி
அரசன் (ஆள்வோன்), ஒரு
பொருளைப் பற்றி மறைவாகப் பேசுகையில் ஒளிந்து ஒட்டு கேட்பது தவறு; அவர் ஒரு காரணம் பற்றி
சொல்லாத பொருளைப்பற்றி தொடர்ந்து வினவுவதும் தவறு. அவராகவே முன்வந்து, முன்பு ஒளித்துப்
பேசிய பொருளைப் பற்றி கூறுவாறாயின் அப்போது மட்டும் கேட்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பில்
இருப்பவர்களுக்கு உள்ள இரகசியக் காப்பு உறுதி மொழியை உடனிருப்பவர்களே உணரவில்லையெனில்,
மதிக்கவில்லையெனில், அது ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும், அவர்களுக்குமே அரசரின் நம்பிக்கையை
இழக்க நேரிடும்.
Transliteration:
epporuLum oRAr thodarArmaR RapporuLai
viTTakkAl kETka maRai.
epporuLum – Whatever be the topic that a king discusses in
secrecy with others
oRAr – however close to Him, shall not listen secretly
thodarAr – when not revealed by the King, shall not pester
to reveal
maRR(u) apporuLai – when about the same topic or matter
viTTakkAl – king on his own decision decides to open up
later,
kETka – listen
maRai – to that previously secretively kept matter
When a King speaks
about a matter in privacy or secret to others, however close a person may be to
the King, shall not listen to it secretively, nor shall persist to know or
pester Him to reveal about it. When a King opens up on his own to talk about
the matter, then it shall be listend to with zeal. Those who are in power would
take an oath of secrecy; they have an obligation to keep the secrecy of matters
pertinent to sovereignty, and shall not reveal even to their own family; if
those that are close to them do not realize it, or be respectful of it, then it
is dangerous to the rule it self. Such people would lose the faith of the ruler
also.
“Never peep in to the secrecy a ruler keeps
nor pester to reveal;
When the ruler decides to open up on his own,
listen with zeal”
இன்றெனது
குறள்:
ஒளிந்துகே
ளாதே ! தொடர்ந்துவின வாதே !
ஒளித்தவரே
சொல்லிடின் கேள்
oLindhukE
LAdhE thoDarndhuvina vAdhE
oLiththavarE
solliDin kEL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam