மார்ச் 20, 2014

குறளின் குரல் - 700

20th Mar 2014

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
                        (குறள் 694: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

செவிச்சொல்லும் - மற்றவர் காதுகளில் இரகசியமாய் பேசுவதும்
சேர்ந்த நகையும் - ஒருவரோடு ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளலும்
அவித்தொழுகல் - இவற்றைச் செய்யாமல் மாண்புற ஒழுகவேண்டும்
ஆன்ற - மாட்சிமை பொருந்திய
பெரியார் அகத்து - மன்னர்க்கு முன்பாக இருக்கும்போது

பொதுவாக ஒரு குழுவிலே வேலை செய்யும்போது, தனியாக இருவர் ஒருவர் காதில் இரகசியமாகப் பேசிக்கொள்வதும், ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக்கொள்ளுவதும், குழுவாக வேலை செய்யும் ஒழுங்குக்கு ஏற்புடையதல்ல. ஒருவர் மாட்சிமை பொருந்திய  மன்னர் முன்பாக இருக்கும்போது, அவர் காணும்படியாக மற்றவரோடு செவியில் இரகசியமாக ஓதுவதும், சிரித்துக்கொள்வதும் மன்னவர்க்கு ஐயத்தையும், அதுவே முற்றி கோபத்தையும் தந்துவிடும். அதனால் அவற்றைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இக்கருத்தை சிறுபஞ்சமூலப்பாடல் இவ்வாறு சொல்லுகிறது.

நகையொது மந்திரம் நட்டார்க்கு வாரம்

பகையொடு பாட்டுரையென் றைந்துந்- தொகையொடு

மூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்

யாத்தா ரறிந்தவ ராய்ந்து.

ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொள்ளலும், ஒருவனோடு செவிச்சொல்லும், தம் நட்புக்காகவும் , சுற்றத்துக்காகவும் பரிந்து பேசுதலும், பகையாடுதலும், கற்றறிந்த பெரியோர் முன்னிலையில் தான் ஒரு பாட்டுக்குப் பொருள் சொல்லுதலும் ஆகிய  இவ்வைந்தும் விலக்கத்தக்கன என்று பழைய நூல்களிலே அறிவுடையார் ஆராய்ந்து சொல்லியிருகின்றன்ர்.

Transliteration:

Sevichchollum sErndha nagaiyum aviththozhugal
AnRa periyA ragaththu

Sevichchollum – To speak secretly in somebody’s ears
sErndha nagaiyum – or to be laughing secretly among themselves
aviththozhugal – must be avoided in their conduct
AnRa – the sovereign
periyAr agaththu – kings presence (in)

When working in a company of people, it is against the decorum, to be speaking secretively or even smiling between for any two persons, and must be definitely avoided. This is even more serious in the presenece of sovereignty and will most definitely render in trouble and invokes the ruler’s wrath against them.

The same thought is conveyed by a poem in “sirupancha mUlam” as part of five deeds to be avoided. They are speaking secretively, smiling at each other while others are looking at, to speak on behalf of friends and relatives, going against with enemity, attempting to discourse and explain a poem before the learned (unasked).

“To speak and smile secretively between any two
 in the presence of sovereignty are avoidable two!”


இன்றெனது குறள்:

மாண்புடை மன்னர்முன் மற்றோர் செவிச்சொலலும்
வீண்சிரிப்பும் செய்வதன்று நன்று

mANbuDai mannarmun maRROr sevichchollum
vINsirippum seyvathanRu nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...