மார்ச் 19, 2014

குறளின் குரல் - 699

19th Mar 2014

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
                        (குறள் 693: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

போற்றின் - அரசனுக்கருகில் இருப்பவர்கள் காக்க வேண்டுமாயின்
அரியவை - பெரும், அரிய பிழைகளை நேராமல், அவ்வாறு நேர்ந்ததாக ஐயம்கூட வாராமல் - (அருங்குணங்களை என்றும் கொள்ளலாம்)
போற்றல் - காக்க வேண்டும்
கடுத்தபின் - அரசன் ஐயுறும்படியான செயல்களை செய்துவிட்டால்
தேற்றுதல் - அவற்றின் விளைவுகளிலிருந்து ஐயுறப்படுபவர்களைக் காப்பாற்றுதல்
யார்க்கும் - யாவர்க்குமே
அரிது - கடினம்

அரியவை என்பதற்கு அரிய குற்றங்கள் அல்லது பிழைகளை என்று பரிமேலழகரிலிருந்து எல்லோரும் பொருள் செய்திருக்கிறார்கள். அதன் வழிநின்று பொருள் செய்தால், அரசனுக்கு அருகில் இருக்கும் அமைச்சர் உள்ளிட்டவர்கள் தங்கள் பக்கத்தில் யாதொரு பெரும் பிழைகளும் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும். அரசன் ஐயுறும் படியான செயல்களைச் செய்துவிட்டால் அவற்றின் விளைவுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் யார்க்குமே மிகவும் கடினம்.

அரியவை என்பதை அருங்குணங்கள் என்று கொண்டால், மன்னரைச் சேர்ந்தொழுகுபவர்கள் காப்பதற்கு அரியவையாம் நற்குணங்களையே மிகவும் போற்றிக் காக்கவேண்டும்.  மன்னர்கள் ஐயுறும்படியாகச் சிறிதளவு நடந்து கொண்டாலும் பிறகு அரசின் நம்பிக்கையை இழந்ததிலிருந்து அரசை மாற்றுவது மிகவும் கடினம். பரிமேலழகர் உரையை ஒட்டி நாலடியார் பாடலொன்று, இவ்வாறு செல்கிறது.

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட
பேர்க்குதல் யார்க்கும் அரிது.

பொறுப்பார்க்கே வெறுப்பன செய்யாதிருக்கவேண்டுமெனின், அரசன் அவ்வாறு பொறுமையைக் கடைபிடிப்பான் என்றிராதபோது, ஐயம் வந்துற்றாலே, தவறே நடக்கவில்லையென்றாலும், அரசனின் அவ்வையத்தை தீர்ப்பது யாருக்குமே அரிது.

Transliteration:

pORRin ariyavai pORRal kaDuththapin
thERRudal yArkkum aridhu

pORRin – those who stay close to a king, if they want to protect onething
ariyavai – from any big mistake or even create doubt in the mind of the king that there was something. (it can be interpreted as precious character)
pORRal - they must stay away
kaDuththapin – from, even the slightest doubt created in a kings mind
thERRudal – to remove it and change it
yArkkum – for anyone,
aridhu – it is difficult.

The word “ariyavai” is interpreted as “mistakes that must be avoided”, from Parimelazagar to all other commentators. If we stay with that intepreation, all that are close to a king must be careful not to make any big mistakes or even create the slightest doubt to the king. Once the doubt sets in, to change the doubt and the following repurcussions, will be impossible for anyone

The word “ariyavai” can also be interpreted as “good etiquette”; those who are close to a king must diligently protect their etiquette. Even if slightly deviant, it would set doubts irrepairably in ruler’s mind, regardless who tries.

Never indulge in mistakes or stray from good etiquette
Should king gets doubtful, impossible it is to change it”


இன்றெனது குறள்:

செய்யா தொழிவீர் பெரும்பிழைகள் மன்னனையம்
எய்தினால் தீர்ப்ப தரிது

seiyA dozhivIr perumpizhaigaL mannanaiyam
eidhinAl thIrppa daridhu

வேந்தோ டொழுகும் வகைதவறீர் ஐயுறின்
வேந்துமீண்டும் நம்பல் அரிது

vEndhO Dozhugum vagaithavaRir aiyurin
vEndhumInDum nambal aridhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...