மார்ச் 18, 2014

குறளின் குரல் - 698

18th Mar 2014

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்.
                        (குறள் 692: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

மன்னர் விழைப - ஆள்வோன் விரும்புவதையெல்லாம்
விழையாமை - தானும் விரும்பாமலிருப்பது
மன்னரான் - அவ்வாள்வோனாலேயே
மன்னிய - நிலைபெறுதர்க்கு உரிய
ஆக்கந் தரும் -செல்வத்தைத் தரும்

ஆள்பவரின் அண்மையில் இருப்பவர்கள் அவர் விரும்புவதையெல்லாம் தானும் விரும்பாமலிருப்பது அவ்வாள்பவராலேயே, நிலையிருத்தக்கூடிய செல்வத்தைப் பெற்றுத்தரும் வேந்தன் விழைவதையெல்லாம் தாமும் விழைந்தால், அது அவனோடு போட்டிப் போடுவதைப் போலாகிவிடும்; அவனுடைய கோவத்தையே தூண்டும்.

இதை ஆசாரக்கோவை பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை

இறப்பப் பெருகியக் கண்ணுந் - திறப்பட்டார்

மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்

மன்னிய செல்வங் கெடும்.

அதாவது, அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். இக்குறளின் விளக்கமாகவே இப்பாடல் உள்ளது.

Transliteration:

Mannar vizhaiba vizhaiyAmai mannarAn
Manniya Akkam tharum

Mannar vizhaiba – What the ruler desires
vizhaiyAmai – a person that works under him shall not desire
mannarAn – Only when such subordinate attitude is there, by the ruler
Manniya – permanent
Akkam tharum – wealth will be bestowed.

Those who work in close quarters to a ruler, shall not desire what the ruler desires; Only such subordinate attitude shall get him a sustainable wealth. If somebody desires what the ruler desires, then it will appear like competition with him, which no ruler will like and will only kindle anger.

A poem from Acharakovai explains this better. Men of intellect, though they are very rich, will not compete with a ruler in being a patron, performing a wedding, doing an effort, or building a house. If they do, he will only invoke the wrath of the ruler for that one-upmanship.

“Not competing and showing one-upmanship with rulers in desire
 Will yield permanent, abundant wealth from a person's superior”


இன்றெனது குறள்:

ஆள்வோன் விரும்புவதில் ஆசையற ஆக்கத்தை
ஆள்வோரே அள்ளித் தரும்

ALvOn virumbuvadil AsaiyaRa Akkaththai
ALvOrE aLLIth tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...