மார்ச் 17, 2014

குறளின் குரல் - 697

69: (Etiquette with Rulers - மன்னரைச் சேர்ந்தொழுகல்)

[This chapter is about the manners, protocol and decorum, collectively known as etiquette in the company of a kings or the ruling class, required for anyone that deals at such high levels. Since ministers and their advisors are in such proximity, they have to follow this]

17th Mar 2014

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
                        (குறள் 691: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

அகலாது - விட்டு விலகாமலும்
அணுகாது - மிகவும் அருகில் சென்று விடாமலும்
தீக்காய்வார் - தீயை மூட்டி குளிர் காய்வார்
போல்க - போலிருக்க வேண்டும்
இகல் வேந்தர்ச் - மாறுபடும் மனமுடைய மன்னரைச்
சேர்ந்(து) ஒழுகுவார் - அணுகி அவரை அண்டி வாழுகின்றவர்.

குளிருக்கு நெருப்பைமூட்டி அது கதகதப்பை ஊட்டுவதால், அதை மகிழ்வுக்கருவி என்று கருதி, அதன் அருகில் சென்றால் சுடாமலிருக்காது; அதேபோல், சுடுமென்று அஞ்சி அருகிலேயே செல்லாதிருந்தால் வேண்டிய கதகதப்பும் கிட்டாது. அதேபோன்று ஆள்வோரை அண்டி, அவரது அணுக்கத்திலே வாழ்கின்றவர், அவர்க்கு அறிவுரைதந்து வழிநடத்தும் அமைச்சராயினும் ஓர் அளவிலேயே அணுக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.  அறிந்தவரென்று அருகில் சென்று உரிமை கொள்வதும், எங்கே நெருங்கினால் கடிவனோ என்று ஒரேயடியாக விலகி இருத்தலும் கூடாது. அளவறிந்து அரசொடு இணக்கமே ஆக்கம் தருவதாகும்.

அரசனொடு நெருக்கம் தீபோன்றதென்பதை ஆசாரக்கோவைப் பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.

“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின்றெனவென் றெண்ணி இகழின் இழுக்கம் தரும்”

சீவக சிந்தாமணிப் பாடல் மன்னனெனும் தீ, கிளையொடு எரிக்கும் என்பதை, “தீண்டினார்தமைச் தீச்சுடும் மன்னர்தீ ஈண்டு தங்கிளையோடும் எரித்திடும்” என்கிறது.

Transliterattion:

agalAdhu aNugAdhu thIkkAivAr pOlga
igalvEndharch chErndozhugu vAr

agalAdhu – not staying away
aNugAdhu – and not being so close to it
thIkkAivAr – warm themselves with bonfire
pOlga – be like them (as said in the last line)
igal vEndharch – fickle minded ruler
chErnd(u) ozhuguvAr – those who are in the occupational proximity of such ruler.

Feeling cold, if someone lights a bonfire to get warmth, thinks of it as an instrument of happiness and goes too close to it, he is likely to get burnt. Likewise, fearing that bonfire will burn, not being close enough will not give the required warmth either. Those that work close or are in occupational proximity, to a ruler, however elevated their status is - such as being a guide to the ruler himself, they must keep their distance with him, especially if the ruler is fickle minded and changes his mind or behavior at will.

Never be too close, taking liberty, using the status accorded, nor stay away fearing that ruler’s wrath. Neither shall work with a fickle minded ruler.

Cheevaga Chinthamani says, a fire will only burn when touched, but a king’s fire of anger will burn the entire clan, even they don’t touch the king anyway, thus cautioning too much closeness.

“As neither being far removed, nor being too close to bonfire to feel warm,
 Shall be a person to a fickle minded ruler, while he has duties to perform”


இன்றெனது குறள்:

ஆள்வோர் அணுக்கம் குளிர்போக்கும் தீயைப்போல்
ஆள்கநெருங் காதுவில காது.

ALvOr aNukkam kuLipOkkum thIyaippOl
ALganerung kAdhuvila gAdhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...