16th Mar 2014
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
(குறள் 690: தூது அதிகாரம்)
இறுதி பயப்பினும் - தனக்கு அழிவைத் தருவதாயினும்
எஞ்சாது - (தன்னுடைய உறுதியில்)
குன்றாது
இறைவற்கு - தம்மை ஆள்வோர்க்கு
உறுதி - நன்மை,
ஆக்கம்
பயப்பதாம் - தருவோனே
தூது - தூதுவனாவான்
தூதுவன்
என்போன் தன் உயிருக்கு அழிவைத்தருவதே வருவதாயிருப்பினும் தம்மை தூது செல்ல பணித்த ஆள்வோர்ர்க்கு
நன்மை தரச் செய்ய தூதுமொழிவதில் உறுதியுள்ளவனாவான்.
தூதாக
வந்தவரைக் கொல்லுதல் அரசர்க்கு அழகல்ல எனினும் சொல்லப்பட்ட செய்தி பிடிக்கவில்லையாயின்
தூதனையே கொல்லுமளவுக்கு பகையரசர்கள் துணியக்கூடும். இராமாயணத்தில் அனுமனைக் கொல்லவே
இராவணன் விழைந்தாலும், அதைத் தடுத்து, குரங்குக்கு வாலை எரித்தல் என்பது அதை கொல்வதற்குச்
சமம் என்று கூறி மாற்று வழியை விபீடணன் கூறி, அவனை தூதனைக் கொல்லும் பாவத்திலிருந்து
தடுத்துவிடுகிறான்.
மகாபாரதத்திலும்
இத்தீய எண்ணம் துரியோதனனுக்கு உதித்தது; அதை அவன் தந்தை திருதராட்டினனும் அதற்கு உடன்பட்டு,
விதுரன் வீட்டிலிருக்கும் கண்ணன், வேடன் வலையில் அகப்பட்ட புலி போன்றவன், அவனைக் கொல்வது
தவறில்லை என்கிறான்; கௌரவர்களில் இருந்த ஒரே நல்லவனாம் துரியோதனின் தம்பியர்களில் ஒருவனான
விகர்ணன் (விபீடணன் போன்றவன்) கொதித்து, அது தர்மமல்ல கூறுகிறான்.
இதுபோன்ற
தருணங்களிலும் தூதர்கள் உறுதியுடன் தம்மை ஆள்பவர்க்கு நன்மை செய்யவேண்டும் என்று இக்குறள்
கூறுகிறது.
Transliteration:
iRudhi payappinum enjAdhu iRaivaRku
uRudhi payappadAm thUdhu
iRudhi payappinum – Even if it brigs destruction
enjAdhu – not diminished in resolve,
iRaivaRku – to his ruler
uRudhi – gains of good
payappadAm – that which gives is
thUdhu – an emissary
An emissary or a
royal messenger shall be resolute in doing good to his king or the ruler, even
if he faces destructive end in his pursuit of his job.
Though diplomatic
immunity is accorded to the emissaries, sometime, irate rulers go to the extent
of killing an emissary. Once again we have to revisit the pages of epics
Ramayana and Mahabharata. In Ramayana, when Ravana is furious to kill Hanuman,
his more sensible brother stops him and gives him an alternative to set fire to
the tail of Hanuman, citing such a deed done to monkey is like killing; Thus he
saves Ravana from the blame of killing an emissary.
Likewise, in
Mahabharata, both Dhuryodana and Dhirdarastra ponder the possibility of killing
Krishna who was staying with Vidura before talking to the above two as an
emissary. Vikarna, a more sane and sensible brother of Dhuryodhana, stops them
saying that it was heinous sin.
This verse says
even if such a moment arises, an emissary must stay resolute to bring good to
his ruler.
“Even at the face of destructive end to self, an
emissary must
be
undiminished in resolve to yield good to king at his behest”
இன்றெனது
குறள்:
அழிவுரினும்
குன்றாது ஆள்வோரை ஆக்கத்
துழிசெய்து
துவ்வுவோன் தூது
(அழிவுரினும்
அஞ்சாது ஆள்வோரை ஆக்கத்து உழிசெய்து துவ்வுவோன் தூது)
உழிசெய்து - இடம் செய்து, துவ்வுவோன் - வலியுறுவோன்)
azivurinum
kunRAdhu ALvORai Akkath
thuzhiseidhu
thuvvuvOn thUdhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam