மார்ச் 23, 2014

குறளின் குரல் - 703

23rd Mar 2014

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
                        (குறள் 697: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)

வேட்பன சொல்லி - ஆள்வோர் விழைவதை, அவர்க்குப் பயனுள்ளதை கூறி
வினையில - அவர்க்குப் பயனில்லாதவற்றை
எஞ்ஞான்றும் - எப்போதும்
கேட்பினும் - அவராகவே வலிந்து, நயந்தும் கேட்டாலும்
சொல்லா விடல் - சொல்லாமல் தவிர்த்திடுக.

ஆள்வோர் விழைவதுவும், அவர்க்குப் பயன் தருவனவுமாகியவற்றை அவர்க்குக் கூற வேண்டும், அவர்களாக கேட்கவில்லையென்றாலும்! பயனற்றவற்றை எக்காலத்திலும், அவர்களாக வலிந்தும், நயந்தும் கேட்டாலும், ஏதாவது ஒரு காரணங்கொண்டு சொல்லாமல் தவிர்க்கவேண்டும், என்கிறது இக்குறள்.  அரசன் கேட்கும் போது அமைச்சர்கள் மறுதலிப்பது கூடாது என்பது நியதி எனினும், பயனற்றவற்றைப் பற்றி அரசர்க்குக் கூறுவதை அவர்கள் தவிர்க்கவே வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்தவே இக்குறள்.

Transliteration:

vEtpana solli vinaiyial enjAnRum
kEdpinum sollA viDal

vEtpana solli – that which the ruler desires, and useful to them,must be spoken to them
vinaiyial – that which are useless to them
enjAnRum – under no circumstances
kEdpinum – even if the ruler asks on his own,
sollA viDal – must avoid to speak

What a ruler desires and is useful must be said to him always, even if the ruler does not ask. Likewise, what is useless to the ruler shall not be said to him, even if he insists and shall be avoided somehow. Though a minister shall not refuse a king’s request, such requests for useless things must be politely, but decidedly refuted, insists this verse.

“Speak what the ruler wishes but is useful to him; avoid
 Always speaking what is useless to him, purpose devoid”


இன்றெனது குறள்:

பயனுள கூறிபயன் அற்றவை என்றும்
நயந்துகேட்டும் கூறா விடல்

payanuLa kURipayan aRRavai enRum
nayandhukETTum kURA viDal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...