8th Mar 2014
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
(குறள் 682: தூது அதிகாரம்)
அன்பு - அன்புடைமை (தம் நாடு,
ஆள்வோன், பிறநாட்டு மக்கள் மீதும்)
அறிவு - கூர்த்த மதி நுட்பம்
ஆராய்ந்த சொல்வன்மை - சொல்லின் செல்வன் எனும்படியாக சொல்வதைத் தேர்ந்து பேசும்திறன்
தூதுரைப்பார்க்கு - தூதாகச்
சென்று தம்மைச் சார்ந்தவருக்காக பேசும்
போது
இன்றியமையாத - மிகவும்
தேவையான
மூன்று - மூன்று
பண்புகளாகும்
இதிகாசத் தூதுவர்களிடையே அனுமனுக்கும், கிருட்டினனுக்கும் ஒற்றுமையும் உண்டு;
வேற்றுமையும் உண்டு. ஒன்றில் அவதார புருடனுக்காக அசுரனிடம், வானரன் தூதுசென்றான். மற்றொன்றில்
அவதார புருடனே நண்பர்களுக்காகத் தூதுசென்றான். இருவருமே இக்குறளில் சொல்லப்படும் மூன்று
குணங்களையும் கொண்டவர்கள்.
அனுமன் இராமபிரானின் மீது கொண்ட அன்பினால் மட்டுமன்றி, கீர்த்தி பெற்ற இராவணன்
ஒரு பெண்மேல் கொண்ட ஆசைக்காக அவனையும், அவன் குடிகளையும் அழித்துக்கொள்ளக்கூடாதே என்று
பகைவனுக்காகவும் பரிவு கொண்டான். அவனுடைய கூர்த்த மதிநுட்பமும், சொல்வன்மையும், இராமாயணத்தில்
சுந்தரகாண்டம் முழுவதிலும் சொல்லப்படுகிறது. அவனே சொல்லின் செல்வன் என்றும் அழைக்கப்படுகிறான்
கிருட்டினனோ, பாண்டவர், கெளரவர் என்ற இரு தரப்புக்கும் பொதுவானவன். துரியோதனுக்காக
தன்னுடைய படையே கொடுத்த வள்ளல், சமத்துவவாதி. அன்பின் காரணமாகவே தூது சென்று ஐந்து
நகரங்கள் என்று தொடங்கி, ஐந்து வீடாவது கொடுக்கவேண்டுமென்று வாதாடினான். அது குரு வமிசம்
அழிந்துபடக்கூடாது என்ற அன்பினாலும், அக்கறையினாலும் விளைந்தது. அவனுடைய மதிநுட்பமும்,
அழகுற ஆராய்ந்து பேசும் பாங்கும் பாரத்தின் பக்கங்களில் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது.
ஆக, அன்பு, அறிவு, சொல்வன்மை மூன்றும் இன்றியமையாதன என்றதால், மற்ற குணங்களும்
தேவை என்று உணர்த்தப்படுவதாகக் கொள்ளவேண்டும். அஞ்சாமையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம்
வள்ளுவர்.
Transliteration:
anbaRivu ArAindu solvanmai
thUdaraippArkku
inRi yamaiyAda mUnRu
anb(u) –
love for own country, the ruler as well as the citizens of opponents
aRivu –
sharp intellect
ArAindu solvanmai –
thoughtful articulation
thUdaraippArkku – for
emissaries
inRiyamaiyAda –
most important
mUnRu – these
three attributes
There
are some similarities as well as differences between the emissaries in epics
such as Ramayana and Mahabharata. In Ramayana, Hanuman, the monkey warrior went
as emissary, on behalf of the God incarnate Rama to the demonic king Ravana. In
Mahabharata, Krishna, the God -incarnate himself went as an emissary to
Kauravas. Both are characterized as exemplary emissaries with these three
traits – love for all, sharp intellect, and unambiguous articulation (with
peace as the primary objective) - mentioned in this verse.
Hanuman,
not only for of his love for Rama, but because of is compassion towards Ravana
who he knew as an illustrious king otherwise, went as an emissary invoking
peace as the primary objective. His sharp intellect and excellent articulation
are cited in many places, particularly in Sundar Kaandam of Ramayana.
Krishna
on the other hand is common to both Pandavas and Kauravas and even gives his
entire army to Duryodana during the war. He begs Kauravas to give at least 5
houses for Pandavas and somehow tries to save both sides from destruction. Here
also his primary objective was peace. Though his intellect and articulation are
cited in Mahabaratha in many places, his role as emissary is a special with the
above mentioned three traits..
Though
these three are mentioned, as important, it is to be construed that there are indeed
other traits that are required of an emissary.
For example, fearlessness is yet another important trait that must also
be listed as one among these.
“Love for all and the
ruler, sharp intellect and thoughtful articulation
are the three important traits required of an
emissary in operation”
இன்றெனது
குறள்:
தூதர்க்கு வேண்டுவன அன்பு அறிவுதேர்ந்து
தீதகன்ற சொல்லெனும் மூன்று
thUdarkku
vENduvana anbu aRivuthErndu
thIdaganRa
sollenum mUnRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam