மார்ச் 09, 2014

குறளின் குரல் - 689

9th Mar 2014

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
                        (குறள் 683: தூது அதிகாரம்)

நூலாருள் - நீதிநெறி நூல்களைக் கற்றறிந்தவர்களிலும்
நூல்வல்லன் ஆகுதல் - மேலோனாக கற்றறிந்தவனாக ஆகுதலே
வேலாருள் - வேற்று அரசரிடமும் (வேற்றரசில் என்றே இருந்திருக்கலாம்)
வென்றி - தம் நாட்டுக்கும் அரசுக்கும் வெற்றிதரும்படியாக
வினை உரைப்பான் - செயல்களை சொல்லுவதே
பண்பு - இலக்கணமாகக் கொள்ளப்பட்டும்! தூதருக்கு என்பது உள்ளுரையாகும்

மாற்றரசர்களிடம் தம் அரசுக்காகத் தூது செல்லுபவர், தாம் எவ்வினைகளுக்காக செல்கிறோமோ, அவை வெற்றிகரமாக நிறைவுற, நீதி நூல் வல்லவர்களயும்விட தாம் நீதி நூல்களை கற்று வல்லவராக இருக்க வேண்டும் என்று தூதர்களுக்கு மற்றொரு இலக்கணமும் வகுக்கிறது இக்குறள்.  

வேலாருள் என்பதற்கு “வேலினை உடைய வேற்றரசரிடம்”, என்று பரிமேலழகர் செய்த உரையை ஒட்டியே திருக்குறள் முனுசாமி போன்றோரும் பதவுரை செய்துள்ளனர்.  இது நேரிசை வெண்பாவுக்காகவே ஏற்றப்பட்ட சொல்லாகத் தெரிகிறது. “வேற்றரசும்” என்று சொல்லியிருந்தால் பொருள் தெளிவாகவே இருந்திருக்கும். ஒன்று இவை சேர்க்கப்பட்ட குறளாயிருந்திருக்கலாம். அல்லது வள்ளுவனும், நேரடிப் பொருளைவிட சொல்லழகுக்காகக் குறள் யாத்தான் என்றே கொள்ளவேண்டும்,

Transliteration:

nUlAruL nUlvallan Agudhal vElAruL
venRi vinaiyuraippAn paNbu

nUlAruL – Among other “learned” in books on ethics
nUlvallan Agudhal – becoming more learned
vElAruL – when to other rulers (on a mission)
venRi – on behalf his own nation and for it to be victorious
vinaiyuraippAn – speak to those rulers to get his work done (successfully)
paNbu – defines an emissary.

Emissary that visits other rulers representing his ruler to successfully complete the undertaken mission must be more learned in works of ethics among others that are well versed in such works. By saying so, vaLLuvar defines in this verse as to how an emissary should be.

The use of word is interpreted to be “the rulers of other states that hold spear” by Parimelazhagar and later day commentators that also did a commentary with word meaning. This could be simply construed to be an adjective to imply the opponent leader or to satisfy the specific type of meter (nERrisai veNpA) in his poetry compromising on clarity. A simpler word such as “vERRasum” would have conveyed the meaning and satisfied the general requirement of the meter too.

“An emissary is one that must be more learned among scholarly
 To be on a mission dealing with opponent rulers, successfully”


இன்றெனது குறள்:

கற்றோரின் கற்றோனாய் வேற்றரசும் போற்றவினை
வெற்றியுற ஆற்றுவோனே தூது

kaRROrin kaRROnAi vERRarasum pORRavinai
veRRiyuRa ARRuvOnE thUdhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...