மார்ச் 07, 2014

குறளின் குரல் - 687

68: (Emissary/Envoy - தூது)

[This chapter on Emissaries is an important one as emissaries are the go between two rulers in settling disputes and sometimes to convey the intention of one ruler to another. In current terminology, they are known as Ambassadors or simply Envoys.]

7th Mar 2014

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
                        (குறள் 681: தூது அதிகாரம்)

அன்புடைமை -  தம் பிறந்த நாட்டின் மீது அன்புடையவராயிருத்தல்
ஆன்ற குடிப்பிறத்தல் - சிறந்த குடிப் பிறப்பு உடையவராயிருத்தல்
வேந்து அவாம் - தூது செல்லுகின்ற அரசனும் விரும்பி உகக்கும்
பண்புடைமை = பண்பை உடையவராயிருத்தல்
தூதுரைப்பான் - இம்மூன்றும் தூது சொல்லுபவன்தன்
பண்பு - பண்பும் இயல்புமாம்

இவ்வதிகாரத்தின் முதற்குறளில் ஒரு தூதுவனுக்கு உரிய முக்கியப் பண்புகளாக தன் நாடு, அரசன், மற்றும் குடிகளிடம் மீது அன்புடைமை, நல்ல குடிப் பிறப்பு, மற்றும் அரசனுக்கு உகந்தவனாக இருத்தல் என்று மூன்று பண்புகளைக் குறிக்கிறார் வள்ளுவர். வேந்தவாம் என்றது, தூது யாரிடத்தில் செல்லுகிறானோ, அவர்களுக்கும் பிடித்தவனாக இருப்பதையும் குறிக்கிறது.

ஒரு தூதனின் இலக்கணத்தை பாரத வெண்பாப் பாடலொன்றும் இவ்வாறு சொல்கிறது:

“அன்புடைமை ஆய்ந்த அறிவுடைமை இற்பிறப்பு
நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த
சுற்றமுடைமை வடிவுடைமை சொல்வன்மை
கற்றடங்கல் தூதின் கடன்”

Transliteration:
anbuDamai AnRa kuDippiRaththal vEndavAm
paNbuDamai thUduraippAn paNbu

anbuDamai – Being attached to the country of birth, citizens and the king
AnRa kuDippiRaththal – being born in a good family
vEnd(u) avAm – being likeable even by the opponent king
paNbuDamai – having such virtuous demeanor
thUduraippAn – are the emissary’s
paNbu - virtues

In this first verse of this chapter, vaLLuvar describes three virtues required of an emissary. They are being attaced and affectionate towards the country, its citizens, and the ruler; being a person good birth from a good family; and being likeable even by the opponent ruler for his pleasing manners.

A verse in BhArata VeNpA also, describes these three and a few more while defining who an emissary is.

“Being kind and affectionate, being born in a good family
 Nature that even opponents define the emissaries greatly”


இன்றெனது குறள்:

அன்போடு நற்குடித் தோற்றம் அரசுகக்கும்
இன்பண்பு கொண்டோரே தூது

anbODu naRkuDith thORRam arasugakkum
inpaNbu koNDOrE thUdhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...