6th Mar 2014
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
(குறள் 680: வினைசெயல்வகை அதிகாரம்)
உறை சிறியார் - சிறு
நிலங்களை ஆள்வோர்கள்
உள்நடுங்கல் அஞ்சிக் - தம்மைச்
சார்ந்தோர் அஞ்சுதலுக்கு (தம்மிலும் வலிமை மிக்கோருக்காய்)
குறை பெறின் - அவர்களிடம்
பணிவுடன், அவர்கள் தயவிலே இருக்க வேண்டியும் வரின்
கொள்வர் - அதையும்
தம்மோருக்காகக் கொள்வர்
பெரியார்ப் - தம்மைவிட
வலியோரிடம்
பணிந்து - பணிவுடன்
வணங்கி (குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தியது போல்)
இக்குறளுக்குப் பொருள் எளிதாக விளங்கக்கூடியதாக
இல்லை. பரிமேலழகர் உரையிலிருந்து, ஏனையோர் உரைகள் வரைக்கும், எல்லாருமே மேலோட்டமாகவே,
இவ்வாறாகத்தான் இருக்கமுடியும் என்ற அளவிலேதான் பொருள் செய்துள்ளனர். “உறை சிறியார்”
என்பதற்கு “அளவிலே சிறிய நாட்டினை ஆளுவோர்”
என்றும், “உள்நடுங்கல்” என்பதற்கு “தம்முடைய நாட்டினோர் வலியுடையோர்க்கு அஞ்சுவது”
என்றும், “குறைபெறின்” என்பதற்கு, “வலியோரின் தயவிலே இருக்கவேண்டிய தாழ்ந்த நிலை அடைந்தால்” என்றும், பொருள் கொண்டால் கப்பம் கட்டி வாழ்ந்த குறுநில
மன்னர்களின் செயல்வகைப் பற்றிச் சொல்வதாக இக்குறள் அமையும்.
இப்போது
குறளின் பொருள் இவ்வாறாகிறது: சிறு நிலங்களை
ஆளுவோர், தம் நாட்டினர் தம்மைவிட வலியோரைக்கண்டு அஞ்சாமல் இருக்க, வலியோரின் தயவிலே
இருக்கவேண்டிய தாழ்வையும், அவரிடம் பணிந்து ஏற்றுக்கொள்வர். இது காரியம் பெரியதா அல்லது
வீரியம் பெரிதா என்ற சொலவடையை ஒட்டியகுறளாகத்தான் கொள்ளவேண்டும்.மானத்தைப் போற்றும்
அரசர்களுக்கு இது சற்றும் பொருந்தாவிட்டாலும், உலகியல் வழக்கில் நடக்கக்கூடியதே என்கிறார்.
இக்குறளை
முற்றிலும் மாறுபட்ட முறையிலும் பொருள் கொள்ளலாம். பெரியோரான அமைச்சர்கள், பொருள் குறைவாக
உடையார் (உறை - பொருள்), அதன் காரணம் பற்றி செய்யும் செயலில் குறைவு வரலாம் என்று அஞ்சி, அதனால் செய்யும் செயலில் குறைவும் வருமானால், அதையும்
பொருட்படுத்தாமல் கொள்வர்; இதுவும் முற்றிலுமாக தருவிக்கப்பட்ட பொருளே!
எவ்வகையில்
பார்த்தாலும், அதிகாரத்தை நிறைவு செய்யும் இக்குறள், இவ்வதிகாரத்துக்கு சற்றும் பொருந்தாவொன்றே
என்று தோன்றுகிறது. இது போன்ற குறள்கள் ஏன் மேற்கோளாகச் சுட்டப்படுவதில்லை என்பதும்
தெளிவாகிறது.
Transliteration:
uRaisiRiyAr uLnaDungal anjik kuRaipeRin
koLvAr periyArp paNindu
uRaisiRiyAr – rulers of small state
uLnaDungal anjik – because their subjects
will be fearful of stronger rulers from outside
kuRai peRin – if they have to be subservient and be at
their mercy
koLvAr – even that they will bear for their
subjects
periyArp – to the stronger outsider
paNindu – being submissive.
It is difficult to understand the meaning of
this verse. From Parimelazhagar to current day commentators, all have done only
a superficial commentary to this verse and mostly as a surmise.
“uRai
siRiyAr” is interpreted as rulers of small land; “uLnaDungal” is interpreted as subjects of the land being frightened
of stronger foes; “kuRali peRin” is
interpreted as lowly state of being at the mercy of stronger rulers by paying
them periodic tributes. Perhaps this verse advises how a ruler of a smaller
land can live under the protection of a ruler of the big land, by paying them
periodic tributes.
The complete meaning of the verse becomes
thus: Rulers of small land will accept a lowly state of paying periodic
tributes to stronger ruler to alleviate the fear of their subjects. This only
points to a resolve that, it is better to be wise and mindful of duties instead
of wasting energies challenging others that are stronger.
We can interpret this verse differently too.
Elderly statesmen, will tolerate the less wealthy fearing they would probably
be not able to complete what they had undertaken and if indeed that would be
the case, still they would accept the work done by them. This again is only a construed
meaning.
Whichever way we look at this verse, there is
no surprise this verse is never used as a quotable quote; this verse also does
not seem to fit the topic of this chapter.
“Submitting to stronger foes for the sake of subjects frightened
is prudent
for rulers of lesser land, instead of being abandoned”
இன்றெனது
குறள்:
வலிகுறைந்தோர் மிக்கோர்க்குத் தாழ்ந்தடங்கி தம்மோர்
நலிந்தஞ்சி டாமல் செயும்
valikuRaindOr mikkOrkkuth thAzhndaDangi thammOr
nalndanji Damal seyum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam