மார்ச் 05, 2014

குறளின் குரல் - 685

5th Mar 2014

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
                        (குறள் 679: வினைசெயல்வகை அதிகாரம்)

நட்டார்க்கு - நண்பருக்கு
நல்ல செயலின்  - நன்மையினை விளைவிக்கும் செயலைச் செய்வதிலும்
விரைந்ததே - விரைந்து
ஒட்டாரை - தம் பகையோடு உறவில் இல்லாது, அவர்க்குப் பகையானவரை
ஒட்டிக் கொளல் - தம்முறவாக சேர்த்துக்கொள்ளுதல் வினையை செப்பமுற செய்யும் வழியாம்

இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரை சாணக்கிய நீதியான,”பகைவனுக்குப் பகைவன் நண்பன்” என்பதை ஒட்டி எழுதியிருப்பதால், அதைப் புறந்தள்ளி, பகைவரோடு இணங்குதல் என்றவாறு பின்னாளைய உரை ஆசிரியர்கள் பலரும் உரை செய்துள்ளனர். குறள் சொல்லப்படுகிற வழியில் சென்றால் “ஒட்டாரை ஒட்டிக் கொளல்” என்பது அவ்வாறே பொருளுமாகிறது.

ஔவையின் கூற்றுபடி, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்” என்பதை நினவில் கொண்டால், அவரைப் பகையாகக் கருதி அவரோடு இணங்குதலைத் தவிர்க்கவே வேண்டும்.  தவிரவும் இனியவை நாற்பதிலும், “நட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே” என்று இதே கருத்து கூறப்படுகிறது. பகையை பகை மறந்த உறவாக்குதல் என்பது நெடிய பாதை; அதுவே செயலானால், செய்யவேண்டியவையெல்லாம் முடங்கிவிடும். அதனால் அதனை வினைச் செயல்வகை அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லிருக்கமாட்டார். அதுவும் அமைச்சர்களுக்கு உண்டான வழிமுறைகளைச் சொல்லும் அதிகாரத்தில் சொல்லமாட்டார். தவிரவும் ஆட்சிமுறை வழிகளில் பகை ஒறுத்தலையே அமைச்சர்களுக்கு வழிமுறையாகச் சொல்லப்படுகிறது.

Transliteration:

naTTarkku nalla seyalin viraindE
oTTArai oTTik koLal

naTTarkku – to friends
nalla seyalin – more tha doing good to them
viraindE - speedlily
oTTArai – enemies of enemies
oTTik koLal – make friends with them is better to get the planned work done.

Parimelazhagar’s commentary for this is perhaps based on ChANakya’s ethics that “foes foe is a friend”; This has been discarded by later day commentators to interpret it as making friends with enemies directly before doing kindly deeds, even to dear friends. True, the direct interpretation of the verse definitely goes with later day interpretation.

However, if we have to go with Auvayyar’s saying, “vanjanaigaL seivArODu iNanga vENDAm” (never be friends with people that are cunning), then we need to understand that such people indulge in hostility and are enemies on that count. Company of such people should be avoided and making friend with them should never be considered. In another work on ethics, - “Iniyavai nArpadu”, the same thought has been conveyed again.

After all, ignoring the enemity and to build a friendly stance is a long and painful path that will become a hinderance to get more important things accomplished. Though sometimes, it is important to turn around a foe to a friend, in a state, it is more important to be mindful of good things to be done to friends. Ignoring friends may have adverse effects of turning them to be foes. Hence this would not have been advised by vaLLuvar. Hence is it right to interpret based on ParimElazhagar’s commentary.

“More than doing kindly deeds to dear friends
 Do expedient alliance with foes of opponents”

இன்றெனது குறள்:

நண்பருக்குச் செய்கின்ற நன்மையினும் தம்பகைக்கு
ஒண்ணாரை நட்பாய்கொள் நன்று

naNbarukkuch seikinRa namaiyinum thampagaikku
oNNArai naTpAikoL nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...