பிப்ரவரி 27, 2014

குறளின் குரல் - 679

27th Feb 2014

ல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
                        (குறள் 673: வினைசெயல்வகை அதிகாரம்)

ல்லும் - இயன்ற
வாய் எல்லாம் - இடங்களிலிலெல்லாம்
வினைநன்றே - செயல் நன்றாம் (செயலின்மையை விட)
ஒல்லாக்கால் - இயலாது போயினும்
செல்லும் - எவ்வாறு வினையாற்றுவோம்
வாய் நோக்கிச் - என்று இடம் நோக்கி
செயல் - வினயாற்ற வேண்டும்.
இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் தண்டம் அல்லது போர் என்ற பொருளை வினையின் மேல் தருவித்து உரை செய்துள்ளார். அதையே இன்னாள் வரை பல உரையாசிரியர்களும் குருட்டுத்தனமாக பின்பற்றியுள்ளனர். இது முற்றிலும் ஊகித்துச் செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. இக்குறள் மிகவும் பொதுவாக வினை செய்வதை வலியுறுத்தியேச் சொல்லப்பட்டுள்ளது.

வினை நன்றே என்பதை “போர்” செய்தாயினும் அல்லது “வலிமையைக்” காட்டியாவது செய்யவேண்டுமென்பது பொருந்தவில்லை. குறள் எழுதப்பட்ட வழியே சென்று பொருள் கொண்டால் இக்குறள் சொல்லும் பொருள் இதுதான். இயன்ற இடங்களில் எல்லாம் ஒருவர் செயலாற்ற வேண்டும்; செயலாற்றாது வாளா இருத்தல் கூடாது. அவ்வாறு இயலாத இடங்களிலும்  எவ்வாறு இங்கு ஏதேனும் செயலாற்றுவோம் என்று கண்டு செயலாற்ற வேண்டும்.

சிலர் இவ்விடத்தில் நான் செய்யத்தக்கவை ஒன்றும் இல்லை என்று செயலியக்கம் இல்லாது இருப்பர். சிலர் இல்லாத இடங்களிலும், இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். வள்ளுவர் முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்காக எழுதிய குறள் இது. இக்குறள் சென்ற குறளின் இயற்கையான தொடர்ச்சியே. விரைந்து ஆற்றுவதை விரைந்தும், மெதுவாக ஆற்றத்தக்கவையை மெதுவாகவும் சொன்னது அக்குறள். அக்குறளும் வினையாற்றாமையை பரிந்துரைக்கவில்லை.

பரிமேலழகரது கற்பனை வளத்தையாவது பாராட்டலாம். பின்னால் உரையெழுதியவர்களின் மந்தைச் சிந்தையை வியக்காமல் என்ன சொல்வது?

Transliteration:

ollumvA yellAm vinainanRE ollAkkAl
sellumvAi nOkkich cheyal

ollum – where possible
vAyellAm – in whichever place
vinai nanRE – being engaged in deeds is good (instead of not doing anything)
ollAkkAl – even if there is none
sellum – how to own something to do
vAi nOkkich – and look for such places to do
cheyal – and act.

Most commentators have followed, rather blindly from what Parimelazhagar wrote as commentary to this verse, which is a complete surmise or guess work on his part. He has somehow brought the context of war to justify to do a deed, if need be; that does not seem to be what VaLLuvar intends to convey here. Since the verse does not seem to convey anything pertinent to “the methods of doing deeds”, Parimelazhagar has perhaps become creative in writing this commentary.

If we interpret the verse as it goes, it simply says, a person must be engaged in the act of doing something (definitely useful, purposeful) in all places. Even if there is none to do, they must look for places to be engaged. This verse simply emphasizes being engaged in the act of doing, not be in slumber of inaction. This seems a natural progression to the previous verse that expedient deeds need to be done expediently and deeds that which needs slow pace needed to be done accordingly.

While we can appreciate the creativity of Parimelazhagar, it is surprising to see the herd mentality of later day commentators.

Wherever possible own up the tasks and be in action
Even otherwise, find places to engage, avoid inaction.


இன்றெனது குறள்:

இணங்குமிடம் எல்லாம் செயல்நன்றே இன்றிச்
சுணங்கினும் செல்லிடம்செய் கண்டு

iNangumiDam ellAm seyalnanRE inRich
chuNanginum selliDamsei kaNDu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...