பிப்ரவரி 26, 2014

குறளின் குரல் - 678

26th Feb 2014

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
                        (குறள் 672: வினைசெயல்வகை அதிகாரம்)

தூங்குக - நீட்டித்து மெதுவாக செய்க
தூங்கிச் செயற்பால - நீட்டித்துச் மெதுவாகச் செய்யவேண்டியவற்றை
தூங்கற்க - விரைந்து செய்க
தூங்காது - விரைந்து
செய்யும் வினை - ஆற்றத்தக்க வினைகளை

இக்குறளால் எல்லா வினைகளையும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல், ஒவ்வொரு வினைக்கும் ஏற்ற வேகத்திலேயே செய்யவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வேகம் விவேகமன்று, பதறாத காரியம் சிதறாது என்ற சொற்றொடர்கள் மெதுவாக செயலுக்கேற்ற கதியில் அந்தந்த செயல்களை ஆற்றவேண்டியதை உணர்த்துகின்றன.

எல்லாச் செயல்களுக்கும் இதுவும் பொருந்துவதல்ல. ஒரே செயலாயிருப்பினும், அதைச் செய்யும் பல காலகட்டங்களிலும் கதியானது வேறுபடுவது இயற்கை. ஒவ்வொரு செயலில் உள்ள பல பகுதிகளுக்கு பொருத்தமான கதிகளில் அவற்றை ஆற்றும் போதுதான் அச்செயல் முழுமையாக உரிய நேரத்தில் நடக்கிறது.

வணிகக் களங்களிலும் போர்களங்களிலும் நீட்டித்துச் செய்வது பகை நிலைக்கு ஆதரவாகப் போய்விடும் என்பதால், அவ்விடங்களில் வேகத்தைக் கூட்டிச் செய்வதே சிறந்தது. இதை வள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே சிந்தித்துச் சொல்லியிருப்பது வியக்கத்தக்கது.

Transliteration:

thUnguga thUngich cheyarpAla thUngaRka
thUngAdu seyyum vinai

thUnguga – Take time to do for
thUngich cheyarpAla – what needs to be done slowly
thUngaRka – do not delay
thUngAdu  done without delay
seyyum vinai – that which needs to be done so (without delay)

This verse stresses that not every task undertaken is to be completed in a hurry; it underscores the fact that every task is governed by appropriate speed for its successful completion. Speed is not always prudent. Unhurried approach will never bury in failure are some of the adages that denote tasks must be done appropriate speed required for each one of them.

Not every undertaking can be executed with deliberated approach. Even if it is a single task, its different phases demand different speeds of execution. This approach that is seen every day in project-management offices in corporate houses and war fields was spelled out 2000 years ago by vaLLuvar.

“That which needs delayed deliberation must be done so.
 That which needs speedy execution must also be done so”


இன்றெனது குறள்(கள்):

தாமதத்து கேற்றவினை தாமதித்தும் மற்றவை
தாமதிக்கா வேகத்தும் செய்

thAmadaththu kERRavinai thAmadhiththum maRRavai
thAmadikkA vEkaththum sei

நீட்டுவன நீட்டிச் செயல்போல் வினைக்குவேகம்
கூட்டவேண்டின் கூட்டியும் ஆற்று

nITTuvan nITTich cheyalpOl vinaikkuvEgam
kUTTAvENDin kUTTiyum ARRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...