21st Feb 2014
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
(குறள் 667: வினைத்திட்பம் அதிகாரம்)
உருவுகண்டு - யாரொருவரையும்
அவர் உருவிலே சிறியராக உள்ளார் என்று பார்த்து
எள்ளாமை வேண்டும் - அதனால்
அவர் திறமையை மதிக்காமல் கேலி பேசுதல் கூடாது
உருள் பெருந்தேர்க்கு - சக்கரங்களினால்
உருண்டு பாதையில் ஓடுகின்ற தேருக்கு
அச்சாணி - அதன்
சக்கரங்களை தேரின் பாரத்தைத் தாங்க வைத்து ஓடவைக்கும் அச்சாணி போல்
அன்னார் - அத்தகு
வலிமையுடையவர்களை (அத்தகு அமைச்சர்களை)
உடைத்து - இவ்வுலகு
கொண்டிருக்கிறது
பெருந்தேரை ஓடவைக்கும்
சக்கரங்களைத் அத்தேரோடு பிணைக்கும் அத்தேரின் அச்சாணி சிறிதேயாயினும் அத்தேரின் பாரத்தைத்
தாங்குபடியாகச் செய்யும் வலியுடைத்து. அதே போன்று உருவில் சிறியராயினும், தம்முடைய
வினைத்திண்மையால் பெரிய அரசையே கட்டிக்காக்கும் திறனுள்ள அமைச்சர்களையும் இவ்வுலகம்
கொண்டிருக்கிறது.
சிறு அச்சாணியின் வலிமையை
உருவில் சிறிய அமைச்சர்களின் வினைத் திண்மைக்கு உவமையாக வள்ளுவர் கூறியது நயமானது.
வலிமையென்பது உருவில் அல்ல, உள்ளத்துள்ளது என்பதும் உணர்த்தப்பட்டது. கடுகு சிறியதாயினும்
காரம் பெரியது அல்லவா? கீழ்வரும் அறநெறிச்சாரப் பாடல், தற்புகழ்ச்சி வேண்டாம் என்பதற்காகச்
சொல்லப்பட்டாலும், “சிறு துரும்புல் பல்குத்த உதவும்” என்ற பொருளில் வந்தாலும், சிறு
அச்சாணி பெரிய அளவில் உதவுவதைக் குறிப்பதைக் காணலாம். அப்பாடல்:
பலகற்றோம்
யாமென்று தற்புகழ வேண்டா
அலாகதிர்
ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார்
கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்.
Transliteration:
uruvukaNDu eLLAmai vENDum
uruLperunthErkku
achchANi annAr uDaiththu
uruvukaNDu –
Never think slightly by the small physical stature of a person
eLLAmai vENDum –
underestimate their capabilities and ridicule them
uruL perunthErkku – for
a big chariot running on wheels
achchANi –
that which bear its whole weight are the small axle pins
annAr –
ministers of such strength
uDaiththu –
this world has such capable persons (ministers)
The axle pin (Linchpin
of a chariot), though small in size can fix the wheels to chariot hold its
weight. Likewise, though small in demeanor, ministers of strength in their
hearts and mind can help a ruler achieve greatly, shouldering the
responsibilities. This world has such capable ministers.
Metaphorical use of linchpin adds strength to what VaLLuvar
wants to convey here. Strength has nothing to do with physical smallness. Mind
and intellect are much more powerful than the bodily strength. Though mustard
seeds are small in size, they are very spicy. Interestingly, such metaphors of
mustard and linchpin have been used in many literary works in similar contexts.
One of the more popular ethical works “aRaneRichAram”
the same example of lynchpin, though in the context of slighting the vainglory.
“Like a
small axlepin can support and stand the weight of a big chariot,
A minister, though small in physical stature
has the guiding intellect”
இன்றெனது
குறள்(கள்):
தேராழிக் கச்சாணி போல்சிறியோ ராயினும்
பேராற்றல் அன்னார்க்கும் உண்டு
thErAzhik kachchANi poLsiRiyO rAyinum
pERARRal annArkkum uNDu
சிற்றுரு கண்டெள்ளல் வேண்டா சிறுகடுகும்
பற்றும் உரைப்பால் பெரிது
siRRuru kaNDeLLal vENDA siRukaDugum
paRRum uraippAl peridu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam