22nd Feb 2014
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
(குறள் 668: வினைத்திட்பம் அதிகாரம்)
கலங்காது கண்ட - செய்வதா
வேண்டாமா என்ற குழம்பாமல், தெளிவுடன் ஏற்றுக்கொண்ட
வினைக்கண் - செயலைச்
செய்கையில்
துளங்காது - செய்யவேண்டு
என்னும் உறுதி, திண்மை குறையாமல்
தூக்கங் கடிந்து - சோர்வு
என்பதை அகற்றி
செயல் - செய்வீர்
ஒரு செயலைச் செய்யுமுன்
அதைச் செய்வதா வேண்டாமா என்கிற ஆய்வும், பிறகு செய்யலாம், அல்லது வேண்டாம் என்கிற தெளிவும்
ஏற்படும். தெளிந்து ஏற்றுக்கொண்ட செயலைச் செய்கையில், உள்ளத்து வலிவு குன்றாமல், சோர்வு
என்பதனை அறவே அகற்றிச் செய்யவேண்டும் என்பது இக்குறள் சொல்லும் கருத்து. தூக்கம் என்பதை
உறக்கம் என்றும் கொள்ளலாமாயினும், அது சோர்வின்கண்ணே வருவதால், சோர்வை அகற்றி என்ற
பொருளிலேயே கொள்வதே பொருத்தமாயும் உள்ளது.
சொல்வன்மை அதிகாரத்தில்,
இக்குறளின் கருத்தையும் சேர்த்தே சொல்லியிருப்பார் வள்ளுவர். “சொலல் வல்லன், சோர்விலன்
அஞ்சான் அவனை, இகல் வெல்லல் யார்க்கும் அரிது”. இக்குறளின் வாயிலாக, தெளிவாகச்
செயலைத் தேர்ந்து எடுத்தல், எடுத்த முடிவில் தளராத திண்மை, சோர்வின்றி செய்தல் ஆகிய
மூன்று கருத்துக்களையும் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
Transliteration:
kalangAdu kaNDa
vinaikkaN tuLangAdu
thUkkang kaDindu seyal
kalangAdu kaNDa – having
accepted without confusion whether to do or not,
vinaikkaN – in such
undertakings
tuLangAdu – without
losing the resolve, strength
thUkkang kaDindu
– not feeling worn out or tired in the middle,
seyal – must
complete the goal of finishing it
Before taking on a task to do, must think through to assess and be clear
if it must be done or not. Once decided to do with a clarity, must charge ahead
to complete the task without losing the resolve or strength and must be devoid
of weariness, tiredness – says this verse. Though the word “thUkkam” used in
this verse can be interpreted as sleep, since it is out extreme weariness, the
root cause sleep must be proper intepretation here.
In the chapter of “Ability to articulate”, VaLLuvar had said the same
thought in addition to the gift of articulation (“solal vallan sOrvilan anjAn
avanai igal vellAl yArkkum aridu”. Through the present verse, vaLLuvar stresses
on clarity of thought before undertaking something, staying firm in the decision to do the
undertaken, and not be mindful of
weariness that may set in during the course.
“Clarity of thought, firmness, and be tireless
are essential to complete tasks with success”
இன்றெனது
குறள்:
தெளிவுடன் தேர்ந்தவினை திண்மையுடன் சோர்வு
துளியுமின்றி
தோய்ந்தொ ழுகு
theLivuDan
tErndavinai thiNamaiyuDan sOrvu
thuLiyuminRi
thOindo zhugu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam