20th Feb 2014
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
(குறள் 666: வினைத்திட்பம் அதிகாரம்)
எண்ணிய - தாம் கருதிய செயல்களை
எண்ணியாங்கு - தாம்
கருதியவாறே
எய்து - அடைவர்
எண்ணியார் - அவ்வாறு
கருதுகின்றவர்
திண்ணியர் - செயல்களில்
உறுதியும் திண்மையும்
ஆகப்பெறின் - உடையவராக
இருப்பின்
மீண்டும் ஒரு பரவலாக
அறியப்பட்டு மேற்கோளாக முழங்கும் குறள். ஒரு செயலைக் கருதுங்கால், அதைச் செய்துமுடிக்க
செயற் திறமை வேண்டுமாயினும், தாம் எவ்வாறு அச்செயலை செய்து முடிக்க எண்ணினரோ அவ்வாறு
செய்ய உள்ளத்துறுதி கொள்ளவேண்டும். அதையே இக்குறளும் கூறுகிறது. அவ்வாறு வினைத் திண்மை
கொண்டவரே தாம் எண்ணிய செயலை எண்ணியவாறு செய்து முடித்து அதற்குண்டான பயனையும் அடைவர்
என்கிறது இக்குறள்.
இதே கருத்தைப் பழமொழிப் பாடல் ஒன்றின் இறுதி இரண்டு
அடிகள் இவ்வாறு சொல்கின்றன.
“முனிவிலராகி முயல்க முனிவில்லார் முன்னிய தெய்தாமை
இல்” (பழமொழி நானூறு: 161).
Transliteration:
eNNiya eNNiyAngu eidu eNNiyAr
thiNNiyar Agap perin
eNNiya – What a person has desired to
accomplish
eNNiyAngu – as desired
eidu – the person shall attain
eNNiyAr – if that who desires
thiNNiyar – are resolute in their
undertaking
Agapperin – to complete them
successfully
Here is another often-quoted
verse. While undrtaking a task to be done, though appropriate skills are
required, very resolute heart and mind are needed to do it as planned. Only
such firmness will help accomplish as desired and help reap the intended
benefits.
The stress in this
verse is about the ability to accomplish “as planned”. Sometimes, we may
set our desire to do something in certain ways to see certain results. Unless
we pursue steadfastly, with every step of the way as planned and do the
appropriate course corrections, the results may wildly off from what we desired
in the first place
“Whatever a person desires, he shall accomplish
and attain
As desired, if pursued with firm, resolute
mind and sustain”
இன்றெனது
குறள் (கள்):
திண்மை வினைக்கண் உளாரேதாம் எண்ணியபோல்
திண்ணமாய் செய்துமுடிப் பர்
thiNmai vinaikkaN uLArEtAm eNNiyapOl
thiNNamAi seidumuDi par
உள்ளத் துறுதிபெற்றார் எண்ணுவதை எண்ணியபோல்
கொள்வார் வினைத்திண்மை யால்
uLLath tuRudipeRRar eNNuvadhai eNNiyapOl
koLvAr vinaiththiNmai yAl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam